இந்த 3 ராசிகளிடம் எப்பொழுதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்- காரணம் தெரியுமா ?
ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் இருக்கும். அப்படியாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் நல்ல பக்கங்களை கடந்து தீய பகுதிகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
அதாவது ஒரு சில ராசிக்காரர்கள் அவர்களுடைய உண்மையான முகத்தை அவ்வளவு எளிதாக காட்டி விடமாட்டார்கள் என்பதால் அவர்களிடம் நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில் எந்த 3 ராசிகளிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் பார்ப்பதற்கு நண்பர்கள் போல் பழகினாலும் அவர்கள் உள்ளுக்குள் ஒருவரை பழிவாங்கும் எண்ணத்தை அதிகம் வைத்திருப்பார்கள். அதாவது யாரேனும் அவர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தை சீண்டி பார்க்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள் என்றால் அவர்களை பழி வாங்கிவிட்டு தான் இவர்கள் தூங்குவார்கள். அந்த அளவிற்கு விருச்சிக ராசிகளிடம் பழிவாங்கும் தன்மை அதிகம் இருக்கும். இவர்களிடம் சற்று கவனமாக பழகுவது அவசியம் ஆகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் பொருத்தவரை அவர்கள் எல்லோரிடத்திலும் அன்பாகவும் சமநிலையாகவும் பழகக் கூடியவர்கள். இருந்தாலும் இவர்கள் உள்ளுக்குள் ஒருவரை பற்றி எடை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆதலால் ஒருவர் இவர்களை ஏதேனும் காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்றால் அந்த நபரை இவர்கள் வார்த்தைகளால் அல்லது செயல்களால் கட்டாயம் ஒரு தக்க பதிலை கொடுத்துவிட்டு இவர்கள் அந்த இடத்தை விட்டு விலகுவார்கள்
மிதுனம்:
மிதுன ராசியில் இருக்கு எப்பொழுதும் இரட்டை தன்மை கொண்டவர்கள். இவர்கள் எப்பொழுது எந்த பக்கம் மாறுவார்கள் என்று கணிக்க முடியாது. ஆதலால் இவர்களிடம் நம்பி ஒரு விஷயத்தை சொல்லி இறங்கும் பொழுது இவர்கள் நம்முடன் பயணம் செய்வது போல் இருக்கும் ஆனால் அவர்கள் திடீரென்று வேறொரு பக்கம் சாய்ந்து அந்த செயலை திசை திருப்பக் கூடியவர்கள். ஆதலால் மிதுன ராசியினரிடம் நாம் எப்போது மிக மிக கவனமாக பழகுவது அவசியமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







