நாம் எப்பொழுதும் இந்த 6 நபர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்
நம் வாழ்க்கையில் மனிதர்களிடமோ அல்லது மிருகங்களிடமோ பழகும் பொழுது எப்பொழுதும் மிக கவனமாக இருக்கவேண்டும்.அதாவது நாம் பேசும் வார்த்தைகளில் தொடங்கி செயல்கள் வரை நன்மையோ தீமையோ அதற்கு ஏற்ப கர்ம வினைகள உண்டு.
அந்த வகையில் நாம் ஒருவரிடம் சரியான முறையில் அணுகாமல் அவர்கள் மனம் நோகும் படி நடந்து கொண்டால் அவர்கள் கொடுக்கும் சாபம் உடனே பலித்து விடும்.அந்த வகையில் நம் குறிப்பிட்ட இந்த 6 மனிதர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும்.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
1.ஒருவர் உண்மையாக நம்முடன் பழகுறார் என்றால்,ஒரு பொழுதும் அவர்கள் மனம் நொந்துகொள்ளும் படி நடந்து கொள்ளக்கூடாது.மேலும் அவர்கள் நம்பிக்கை உடைந்து போகும் படி நடந்து கொண்டு அவர்கள் மன வேதனை அடைந்தால் அவை நம்மை மிக கடுமையாக பாதிக்கும்.
2.மனிதன் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் இருந்தாலும் தன்னுடைய உழைப்பில் வாழாமல், எவன் ஒருவன் பிறர் பணம் பொருள் அபகரித்து சொத்து சேர்கின்றானோ அவன் நிச்சயம் பணத்தை இழந்தவர்களின் சாபத்திற்கு ஆளாகுவன்.அப்பொழுது உருவாகும் சாபம் அவனை மிக மோசமாக பாதித்து விடும்.
3.மேலும் பிறரிடம் பணம் பறிப்பதற்காக ஏமாற்றி காதல் மற்றும் திருமணம் செய்து கொண்டு பிறகு அவர்களை பிரிந்து சென்றால் அவர்கள் விடுக்கும் சாபம் அந்த நபரை நிலைகுலைய செய்துவிடும்.
4.நம்மை இந்த பூமிக்கு அறிமுகம் படுத்தியவர்கள் பெற்றோர்கள்.அவர்கள் வளர்ப்பதற்கு துன்பப்பட்டு பணம் சம்பாதித்து வளர்க்கும் பொழுது எந்த சூழ்நிலையிலும் அவர்களை உதாசீனம் செய்து கஷ்டப்படுத்தக்கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு உழைத்தாலும் முன்னேறவே முடியாது.
5.அதே போல்,தாய் தந்தை இல்லாத குழந்தைகளை சொந்தங்கள் எடுத்து வளர்க்கும் பொழுது அவர்களை மறந்தும் மனவேதனை அடையச்செய்யக்கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது அவை நம்மை பல ஜென்மம் எடுத்தாலும் பாவம் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும்.
6.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதியில் குறைவானவர்களை ஒருபோதும் அவமதிக்க கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது அதை நம்மை மிகவும் மிக மோசமாக பாதிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |