துரோகியாகவே இருந்தாலும் ஒருவர் இறந்து விட்டால் இதை செய்யாதீர்கள்
மனிதனுக்கு அவன் உயிர் உள்ள வரை தான் போராட்டம்.இறந்து விட்டால் எல்லாம் மாயை.அப்படியாக வாழும் காலங்களில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.சமயங்களில் தேவை இல்லாத வெறுப்பு,கோபம் ஒரு மனிதன் மேல் உருவாகி விடும்.
இன்னும் சிலருக்கு அந்த வெறுப்பு அதிகம் ஆகி எதிரிகளாக மாறி பல இன்னல்களை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.காலம் கடந்து அந்த மனிதன் இறந்தாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் உள்ள எரிச்சல் குறைவதில்லை.
இறந்த பிறகும் அவர்களை பற்றி குறை சொல்வது திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு செய்யும் பொழுது அந்த நபருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் கடும் தோஷம் உறுவாகும். அதே போல்,இறந்த மனிதன் நமக்கு எவ்வளவு பெரிய துன்பம் கொடுத்திருந்தாலும் அவன் இறப்பில் மகிழ்ச்சி அடையக்கூடாது.
அவர்களை அவதூறாக பேசக்கூடாது.இருக்கும் காலத்தில் பேசுவது வேறு மறைந்த நபரை விமர்சிப்பது அகங்காரத்தின் உச்சம் ஆகும்.இவ்வாறு செய்யும் பொழுது சனிபகவானின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம்.
அந்த கோபம் பல பிறவி எடுத்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இதனால் நாமும் நம் குடும்பமும் கடும் பாதிப்புகளை சந்திக்க கூடும்.மேலும்,அவை பிரேத சாபம்" உண்டாக்கும்.ஆதலால் அவர்களுக்காக முடிந்த வரை ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்து கொள்வது இருவருடைய கோபம்,வன்மம் முற்றிலும் விலகும்.
மேலும்,மனிதன் செய்யும் எல்லா செயல்களுக்கும் பரிகாரம் உண்டு என்றாலும்,அவன் செய்யும் சில விஷயங்களுக்கு ஒரு போதும் பரிகாரம் பெறமுடியாது என்பதில் ஒன்று தான் இறந்தவரை அவமானம் செய்யும் வகையில் பேசுவது.
ஆக யாராக இருப்பினும்,எவ்வளவு பெரிய சங்கடம்,தீய விளைவுகள் அளித்த மனிதனாக இருந்தாலும் இறந்த பிறகு அவன் செய்த தீய செயல்களை மறப்பதே மனிதத்துவம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |