தனுசு ராசியில் புதன்- எந்த 4 ராசிகள் ராஜயோகம் பெறப்போகிறார்கள்?
ஜோதிட சாஸ்திரப்படி சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசி மாறுகிறது.புதனும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம் ஆகும்.சந்திரனுக்கு அடுத்தபடியாக புதன் தான் வேகமாக ராசி மாறுகிறார்.
இந்த கிரகம் சுமார் 23 நாட்கள் ஒரு ராசியில் இருக்கும். நேற்று ஜனவரி 3ஆம் தேதி வரையில் விருச்சிக ராசியிலிருந்த புதன் பகவான் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தனுசு ராசிக்குள் நுழைகிறது. புதனின் இந்த ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த 4 ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மிதுனம்:
இந்த ராசியின் அதிபதி புதன் கிரகம். ஆக இந்த நேரத்தில் உங்களுக்கு அடுத்து அடுத்து செல்வம் சேரும்.பணி இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக அமையும்.வீட்டில் உள்ள சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும்.உயர் பதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதியும் புதன் தான்.பழைய நண்பர்கள் சந்திப்பதால் உங்களுக்கு ஆதாயமாக அமையும்.மனதில் அமைதி பிறக்கும்.அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.செய்யும் வேலையை பிடித்து செய்வீர்கள்.மனத்தில் உற்சாகம் பெருகும்.வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உருவாகும்.உறவினர்களுடன் நல்ல உறவுமுறை ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். ஜனவரி 4ஆம் தேதியான இன்று விருச்சிக ராசியிலிருந்து புதன் தனுசு ராசியில் நுழைகிறார்.கணவன் மனைவி பந்தம் இனிமையாக அமையும்.பொருளாதார முன்னேற்றம் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.செல்வாக்கு மிக்கவர்களுடன் நல்ல உறவு முறை ஏற்படும்.சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் நல்ல லாபம் பெருவீர்கள்.மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியின் அதிபதி குரு பகவான்.இளைஞர்கள் தங்கள் எதிர்கால பற்றிய சிந்தனை மேலோங்கும்.படிப்பிலும் வேலையிலும் தங்களது முழு உழைப்பை போடுவீர்கள்.மாணவர்களுக்கு போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும்.குழைந்தைகள் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள்.தொலைதூரம் பயணம் செல்வதால் மனதில் சந்தோசம் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |