எந்த தேதியில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்?
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.இது ஒரு அழகான உன்னதமான உறவு என்றே சொல்லலாம்.அதாவது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நேரம் வரும் பொழுது நமக்கான ஒருவரை விதி இணைத்து வைத்து அவர்களிடம் வாழ்க்கையை பகிர்ந்து வாழ்வது என்பது எத்தனை சிறப்பான ஒன்று.இந்த உறவில் தான் நாம் வாழ்க்கையின் மிக பெரிய பாடத்தை கற்று கொள்ள முடியும்.
அதாவது இருவரும் சேர்ந்து ஒன்றாக சிந்தித்து வாழ்க்கை பயணத்தை பகிர்வது என்பது சாதாரணம் விஷயம் அல்ல.ஆக அப்படியான பந்தத்தில் நாம் என்னதான் சிறந்த முறையில் செயல்பட்டாலும் சமயங்களில் கிரக சூழ்நிலையால் பிரச்சனை உண்டாகி விடும்.
மேலும் ஒருவர் திருமண வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதுவது அவர்கள் இருவரும் ஒன்று இணைந்த நாள் தான் அதாவது திருமண நாள்.அந்த நாள் தான் அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பான பந்தத்தை இணைத்த ஒன்று.அப்படியாக அந்த நாள் தேதியை சிறந்த முறையில் ஜோதிடர்கள் வைத்து தேர்வு செய்யவேண்டியது மிக மிக அவசியம்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சில தேதியில் திருமணம் செய்யதல் அவ்வளவு சிறப்பானதாக அமையாது என்று சொல்லுவதுண்டு.அப்படியாக 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எண் கணிதவியலில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த தேதிகளில் திருமணம் செய்பவர்கள் வெகு விரைவில் மன கசப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.உறவில் அன்பும் நெருக்கமும் இருந்தாலும் சில பிரச்சனைகளால் உறவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.
என்னதான் மன பொருத்தம் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் சில விஷயம் கட்டாயம் ஆகிறது.அப்படியாக இந்த தேதியில் திருமணம் செய்பவர்கள் இடையே அடிக்கடி பொருளாதார நெருக்கடிகள் மன சங்கடங்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அதுமட்டுமின்றி இவர்களின் வார்த்தைகளால் அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் இந்த தேதிகளைத் தவிர வேறு தேதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் சில ஜோதிட நிபுணர்கள் மூல எண் 7-ல் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு சிறப்பாக இல்லை எனக் கூறுகிறார்கள்.
எனவே 7, 16, 25 தேதிகளில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது எனக் கூறுகிறார்கள். இந்த தேதியில் திருமணம் செய்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பிரச்சினை முடிய முடிய புது பிரச்சினைகள் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
ஆக திருமணம் என்பது பல பிரச்சனைகள் கடந்து தான் வாழ வேண்டும்.என்னதான் எல்லா பிரச்சனைகள் சரி செய்து கொண்டு வாழமுடியும் என்றாலும் சில கிரக நிலை நம்முடைய எண்ணத்தையே மாற்றி அமைக்க கூடிய வலு பெற்றது.ஆக ஒரு குறிப்பிட்ட சில விஷயங்களை சரியாக தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சி அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |