ஜாதகத்தில் 10 ஆம் இடம் உங்களை பற்றி சொல்வது என்ன ?
ஜோதிடத்தில் ஒருவர் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். இந்த 12 கட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு கட்டமும் நம் வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. அந்த வகையில் ஜாதகத்தில் ஏன் பத்தாம் இடம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம்.
ஒருவர் வாழ்க்கை பத்தாம் இடம் வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்னாலும் மிகையாகாது. காரணம் இந்த பத்தாம் இடம் தான் ஒருவருடைய தொழில் அவருடைய அந்தஸ்து அங்கீகாரம் சமுதாய வாழ்க்கை அனைத்தையும் குறிப்பிடத்தக்கது.
இந்த பத்தாமிடம் என்பது உடனடி வெற்றியை கொடுக்குமா என்று கேட்டால் கிடையாது. ஆனால் ஒன்றை மட்டும் தான் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்தாம் இடம் வலுவாக இருந்தால் கட்டாயம் அந்த நபர் சாதாரண வாழ்க்கையை மட்டும் வாழ மாட்டார்.
ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ காத்திருப்பார் என்று நாம் சொல்லலாம். இந்த பத்தாம் இடம் தான் ஒரு மனிதனுடைய முயற்சி, ஒரு மனிதனின் அடையாளம் அவனுடைய கனவு இவைகள் அனைத்தையும் நோக்கி ஓட தூண்டக்கூடிய இடம் ஆகும்.
மேலும், இந்த பத்தாம் இடத்தில் என்ன கிரகங்கள் அமைந்திருக்கிறதோ அதன்படியான பலன் கிடைக்கும். ஒருவருக்கு இந்த பத்தாம் இடத்தில் ஒரு சுப கிரகங்கள் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த நிலைக்கு உயரப்படுவார்.
இருந்தாலும் சில கடினமான பாதை கடந்தாக வேண்டும். மேலும் 10-ஆம் இடத்தில் வலுவான கிரகங்கள் அமைய பெரும் பொழுது அந்த நபர் சமுதாயத்தில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட கூடிய ஒரு நபராகவும், வாழ்க்கையில் ஏதோ ஒரு சாதனை செய்த ஒரு மனிதனாகவும் இருப்பார்.
இந்த பத்தாம் இடத்தில் இருக்க கூடிய கிரகம் ஒருவரை வாழ்க்கையை முன்னோக்கி தள்ளக்கூடிய ஒரு கிரகமாக அமைகிறது. ஆதலால் உங்களுடைய ஜாதகத்தில் பத்தாமிடத்தில் என்ன கிரகங்கள் இருக்கிறதோ அந்த கிரகத்தை பொறுத்து உங்களுடைய வாழ்க்கை அமையும். அந்த கிரகங்கள் நல்ல முறையில் இருந்தால் கட்டாயம் கவலை வேண்டாம் நீங்கள் ஒரு மிக உயர்ந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







