ஜாதகத்தில் 4ஆம் இடம் உங்களைப் பற்றி சொல்வது என்ன?
ஜோதிடத்தில் பொருத்தவரையில் நம் வாழ்க்கையை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஜாதகத்தில் இருக்கக்கூடிய 12 கட்டங்கள் வைத்தும் அவர்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களுடைய குண நலன்கள் எப்படி இருக்கும்? தாய் தந்தையுடன் பந்தம் எப்படி இருக்கும்?
தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்? நண்பர்கள் எப்படி அமைவார்கள்? பொருளாதாரம் எப்படி இருக்கும்? என்று நம் எல்லாவற்றையும் கணித்து சொல்லிவிட முடியும். அந்த வகையில் ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய நான்காவது இடம் அந்த நபரை பற்றி சொல்வது என்னவென்று பார்ப்போம்.
ஜாதகத்தில் நான்காம் வீடு என்பது மிகவும் முக்கியமான ஒரு வீடாக பார்க்கப்படுகிறது. இந்த நான்காம் வீடு தான் ஒருவருடைய குடும்ப வாழ்க்கை அவருடைய தாய் மற்றும் அந்த ஜாதகர் உணர்வுகளைப் பற்றி சொல்லக்கூடிய ஒரு இடமாகும்.
இந்த நான்காம் இடத்தில் வலுவான கிரகங்கள் அமையும் பொழுது அந்த ஜாதகர் மன நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உணரக்கூடிய ஒரு தன்மை கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு மனிதனுடைய நிலைத் தன்மையை இந்த நான்காம் வீடு தான் தீர்மானிக்கிறது.
இந்த நான்காம் வீடு சரியாக அமைந்து விட்டால் அவருக்கு குடும்பத்தினுடைய அனைத்து ஆறுதலும் உதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும். ஆனால் இந்த நான்காம் வீடு ஒருவருக்கு சரியாக அமையாத பொழுது அந்த நபரின் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்கிறார். அதாவது அவர்களுக்கு குடும்பத்தின் வழியாக கிடைக்கக்கூடிய அத்தனை ஆறுதலும் அத்தனை உதவிகளும் தடைப்பட்டு போகிறது.
மேலும் நான்காம் வீடு சரியாக அமையாவிட்டால் அந்த நபரின் உடைய தாய்க்கும் இவருக்கும் சில கருத்து வேறுபாடுகளும் பிரிவும் கூட உண்டாகும். இந்த நான்காம் வீடு சரி இல்லாத நபர் எப்பொழுதும் தனக்கான ஒரு ஆறுதலை தேடி அலையும் நிலையில் உருவாகிவிடும்.
உதாரணமாக நான்காம் வீட்டில் சனி பகவான் இருக்கிறார் என்றால் அவருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சுமையாகவும் பாரமாகவும் அமைந்துவிடும். அந்த நான்காம் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார் என்றால் அவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு இடத்தில் வசிக்கும் நிலை உண்டாகிவிடும்.
ஜாதகத்தில் ஒருவருடைய நான்காம் வீடு தான் அவருடைய குடும்ப வாழ்க்கை அவருடைய குடும்பத்தை பற்றி சொல்ல கூடிய ஒரு இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் என்ன கிரகங்கள் இருக்கிறதோ அல்லது வேறு எந்த கிரகங்கள் உடைய பார்வை படுகிறதோ அதை பொறுத்து அந்த நபரின் உடைய வாழ்க்கையும் அமைதி நிலையும் உருவாகிறது. ஆக உங்களுடைய நான்காம் வீடு எந்த கிரகங்கள் கொண்டு அமைய பெற்றிருக்கிறதோ அதை கொண்டு உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் புரிந்து கொண்டு வாழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







