சிதம்பர ரகசியம் என்றால் என்ன தெரியுமா? வியக்கவைக்கும் தகவல்கள்
பொதுவாக ரகசியம் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரக்கூடியது "சிதம்பரம் ரகசியம்" தான். அப்படியாக உலகம் முழுவதும் சிதம்பர ரகசியம் என்ற ஒற்றை சொல்லால் சிதம்பர நடராஜர் திருக்கோவில் மிகவும் பிரபலம். அப்படியாக சிதம்பர ரகசியம் என்றால் என்ன? உண்மையில் அங்கு என்ன இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தத்துவத்திற்குரிய தலமாகும்
1. பூமி- காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்
2. நீர்- திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
3. தீ - திருவண்ணாமலை அண்ணாமலையார்
4. காற்று - ஸ்ரீகாளஹஸ்தி
5. ஆகாயம் - சிதம்பரம்

நடராஜர் இங்கு இறைவன் உருவம் + அருவம் இரண்டும் இணைந்த அருவுருவ திருக்ககோலத்தில் அருள் பாலித்து வருகிறார். அதாவது கண்களுக்கு தெரிகின்ற உருவமும் மனதிற்கு மட்டுமே புரிகின்ற உண்மை என்ற இரண்டையும் சேர்ந்தது போல் தரிசிக்க வேண்டிய தலமாகும். மேலும் சிதம்பரத்தில் நடராஜர் ஆடும் நடனத்தை “Cosmic Dance” என அழைக்கப்படுகிறது.
1. சிருஷ்டி (படைப்பு)
2. ஸ்திதி (பாதுகாப்பு)
3. சம்ஹாரம் (அழிவு)
4. திரோபாவம் (மாயை)
5. அனுக்ரகம் (அருள்) இந்த தொழிலையும் ஒரே நடனத்தில் வெளிப்படுத்தும் அதிசய வடிவமே நடராஜர் ஆவார். மேலும் சிதம்பர கோவில் மனித உடலை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இங்கு கோவிலில் இருக்கக்கூடிய 9 நுழைவாயில்கள் மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது.

அதாவது (2 கண்கள், 2 காதுகள், 2 மூக்கு, வாய், மலவாய், சிறுநீர்வாய்) ஆகும். அதேபோல் கோவிலில் இருக்கக்கூடிய பொற்குறை விமானம் 21,600 தங்கத் தகடுகள் மனிதன் ஒரு நாளில் சராசரியாக எடுக்கும் 21,600 சுவாசங்களை குறிக்கும். அதேபோல் 72,000 தங்க ஆணிகள் மனித உடலில் உள்ள 72,000 நாடிகளை குறிக்கின்றன.
அதனால் சிதம்பர நடராஜர் ஆலயம் கோவில் மட்டும் அல்ல ஒரு மனித உடலின் ஆன்மீக வரைபடம் என்றே சொல்ல்லாம்.
சிதம்பர ரகசியம் இருக்கும் இடம் :
இக்கோவிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் உள்ள சிறிய வாயில் உள்ளது. அதுவே சிதம்பர ரகசிய பீடம் ஆகும். அங்கே எந்த சிலையும் இல்லை, எந்த உருவமும் இல்லை. அவை நீல நிறத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை விலக்கப்பட்டு கற்பூர ஆராத்தி காட்டும் பொழுது தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ மாலை மட்டும் தொங்கும். அதன் உள்ளே ஆகாயம் இருக்கும்.
ஆக அந்த வெட்டவெளி தான் சிதம்பர ரகசியம் ஆகும். அவை கூறும் செய்தியாது.. “இந்த உலகில் நீ சேர்த்து வைத்த எதுவுமே நிரந்தரம் இல்லை. உருவம் அழியும்… பெயர் மறையும்… ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஆகாய தத்துவம் மட்டும் நிலைத்திருக்கும்.
இதையே சைவ சித்தாந்தம் சிதம்பர ரகசியம் என போற்றப்படுகிறது. இந்த ரகசியத்தை எவர் ஒருவர் மனதார உணர்ந்து தரிசனம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மோட்சம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |