தலைவர் விஜய்க்கு வெற்றி வாகையை சூடிக்கொடுத்த நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன?

By Sakthi Raj May 05, 2026 07:25 AM GMT
Report

  ஜோதிடம் என்பது நாம் பிறந்த நேரத்தை வைத்து கணித்துக் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அமைப்பாகும். அதில் கிரகங்கள் எந்த ராசி வீடுகளில் அமைந்திருக்கிறது என்பதை பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கை பலன் மாறுபடுகிறது.

அப்படியாக, ஒரு சில கிரகங்கள் ஜாதகத்தில் உச்சம் நீசம் என பல நிலைகளில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், நீசபங்கம் ராஜயோகம் என்றால் என்ன?

தற்பொழுது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு கை கொடுத்தது இந்த நீசபங்க ராஜயோகம் என்று பல ஜோதிடர்கள் தெரிவிக்கின்ற நேரத்தில் நீச பங்க ராஜயோகம் ஒருவர் ஜாதகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

தலைவர் விஜய்க்கு வெற்றி வாகையை சூடிக்கொடுத்த நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன? | What Is Neesa Bhanga Rajayogam In Horoscope

ராகு கேது குரு மற்றும் சனியின் ஆட்டம் தொடங்கியது.. 2027 வரை இவர்கள் தான் ராஜாவாம்

ராகு கேது குரு மற்றும் சனியின் ஆட்டம் தொடங்கியது.. 2027 வரை இவர்கள் தான் ராஜாவாம்

ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைகிறது என்றால் அந்த கிரகமானது அதனுடைய காரகத்துவ பலன்களை குறைத்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அந்த கிரகம் தொடர்பான எந்த ஒரு நல்ல பலன்களையும் அந்த ஜாதகர் பெற்றுவிட முடியாது.

ஆனால், ஜோதிடத்தில் விதி இருக்குமாயின் அதற்கு விலக்கு என்ற ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு கிரகம் நீசம் பெற்றால் வலு இழப்பதை போல் நீச பங்கம் பெறுகின்ற பொழுது அந்த கிரகம் இழந்த வலுவை பல மடங்கு பெறுகிறது என்பது ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

அதாவது, ஒரு கிரகம் நீசபங்கமடையும் போது அந்த கிரகம் உச்சத்தில் இருந்தால் தரக்கூடிய பலனை விட வலிமையான பலனை தரக்கூடும் என்பதுதான் விதி. ஆனால் ஆரம்பத்தில் இந்த நீசபங்க கிரகங்கள் அந்த ஜாதகருக்கு தடை, தாமதத்தை வளர்ச்சியின்மையை கொடுப்பார். அதாவது, லக்னாதிபதி நீசம் அடைந்து முறையாக நீச்ச பங்கம் பெற்றெடுக்குமானால் அந்த ஜாதகர் முதலில் வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு பிறகு வெற்றியை சந்திப்பார்.

தலைவர் விஜய்க்கு வெற்றி வாகையை சூடிக்கொடுத்த நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன? | What Is Neesa Bhanga Rajayogam In Horoscope

உங்கள் ராசி படி உங்களுக்கு எப்பொழுது திருப்புமுனை அமையும் தெரியுமா?

உங்கள் ராசி படி உங்களுக்கு எப்பொழுது திருப்புமுனை அமையும் தெரியுமா?

நீசபங்க ராஜயோகம் எப்படி கண்டுபிடிப்பது: ஒருவர் ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகமானது ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும். நீச கிரகத்தை மற்றொரு நீச கிரகம் பார்க்க வேண்டும். நீச கிரகமானது பரிவர்த்தனை பெற்று இருக்க வேண்டும்.

நீசகிர வர்கோத்தமம் பெறுதல். அதாவது ராசி கட்டத்திலும் நவாம்சம் கட்டத்திலும் ஒரே இடத்தில் பெற்று இருக்க வேண்டும். நீச கிரகம் ஆனது வக்ர நிலையில் இருக்க வேண்டும். நீச கிரகத்துடன் உச்சகிரகம் சேர்ந்து இருக்க வேண்டும்.

நீச கிரகம் லக்னத்தில் அல்லது சந்திர கேந்திரத்தில் இருக்க வேண்டும். நீச கிரகம் அமைந்திருக்கும் ராசி அதிபதி பரிவர்த்தனை பெற்று இருக்க வேண்டும். இது போன்ற விதிகள் நீச பங்க ராஜயோகத்தை கொடுக்கிறது. இதனால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US