2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா?

By Sakthi Raj Sep 20, 2026 09:00 AM GMT
Report

புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த மாதத்தில் ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடைகள் யாவும் நீங்கும். அவர்களுடைய பாவம் முற்றிலும் விலகி புண்ணியங்கள் வந்து சேரும்.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உரிய விழாக்கள் மிகப்பெரிய அளவில் நடைபெறும். அதிலும், திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் ஆலயங்களில் வருடாந்திர திருவிழாக்களும் நடப்பது உண்டு.

திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பங்கள் புரட்டாசி மாதம் மாவிளக்கேற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா? | What Is Special About 2026 Purattasi Month

திருப்பதி பெருமாள் பலருக்கும் குலதெய்வம்... அவருடைய குலதெய்வம் யார் தெரியுமா?

திருப்பதி பெருமாள் பலருக்கும் குலதெய்வம்... அவருடைய குலதெய்வம் யார் தெரியுமா?

மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் தான் சனி பகவான் அவதரித்தார். அதனால் அவருடைய கெடு பலன் குறைய திருமாலை வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கொடுக்கும்.

ஒரு சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி சென்று அவர்களுடைய நேர்த்திக்கடனையும் காணிக்கையும் செலுத்தி வருவார்கள்.

புரட்டாசி மாதத்தில் இருக்கக்கூடிய இன்னொரு முக்கியத்துவமான விஷயம். அது பித்ரு தேவதை வழிபாடு இறைவழிபாடு சக்தி வழிபாடு என எல்லா அம்சங்களையும் அடக்கி இருப்பதே ஆகும்.

புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட எதிரிகளும் விலகிச் செல்வார்கள்.

2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா? | What Is Special About 2026 Purattasi Month

மகாளய பட்சம் காலத்தில் வரும் ஒவ்வொரு தித்திக்கும் தனி சிறப்பு உண்டு.. என்ன தெரியுமா

மகாளய பட்சம் காலத்தில் வரும் ஒவ்வொரு தித்திக்கும் தனி சிறப்பு உண்டு.. என்ன தெரியுமா

புரட்டாசி மாதத்தில் பிறந்த ஆன்மீக பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கக்கூடிய ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ ரங்க நாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

மேலும், புரட்டாசி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம் அதனால் இந்த மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்பது வாஸ்து குறிப்பு.

கல்வி தடை, திருமண தடை, நோய், பண பிரச்சனை போன்றவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது எல்லா பிரச்சனைகளையும் விடுதலை பெற்றுக் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US