புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?
பொதுவாக, எல்லா மாதங்களில் நாம் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனா, புரட்டாசி பிறந்தால் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடிய வீடுகளில் அதை அந்த மாதம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன தெரியுமா? அதை பற்றி பார்ப்போம்.
ஜோதிட ரீதியாகவும் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது. ஆறாவது ராசியாக இருக்கக்கூடிய கன்னி ராசியில் பிறக்கக்கூடியது இந்த புரட்டாசி மாசம். சூரியன் கன்னி ராசியில் இருக்கக்கூடிய காலமாகும். புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன் பகவான் ஆவார்.

புதன் என்பது விஷ்ணு பகவானுடைய அம்சமாகும். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம். ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் இந்த மாதம் பெருமாளை வழிபாடு செய்வதால் கல்வி வேலை வாய்ப்பு என்று எல்லா விஷயங்களிலும் நாம் சிறந்து விளங்கலாம்.
மேலும், பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சனிக்கிழமைகளில் வீடுகளில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த புரட்டாசி மாதம் மழையுடன் துவங்கும். இத்தனை மாதம் வெயிலில் சூடாக இருந்த பூமி மழை நீரில் ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.

அந்த காலகட்டங்களில் நம்மை சூட்டை கிளப்பிடவிடும். இது இந்த வெயில் காலங்களில் வரக்கூடிய வெப்பத்தை காட்டிலும் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இந்த நேரங்களில் நாம் அசைவம் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல்நலம் பாதிப்பு உண்டாக்கலாம்.
மேலும், இதனை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் துளசிக்கு உண்டு. இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நம்முடைய உடல் நலத்திற்காகவும் வாழ்க்கை நலத்திற்காகவும் இந்த முறையை நாம் கடைபிடிக்கிறோம். எதுவாக இருந்தாலும் இறைவனுடைய அருள் பெறுவது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |