அட்டமா சித்திகளில் முதல் சித்தி - அணிமா

By வாலறிவன் Jul 13, 2024 07:34 AM GMT
Report

சித்தர்கள் அட்டமா சித்திகள் கொண்டவர்கள் என கூற, படிக்க கேட்டிருப்போம். உண்மையில் அட்டமா சித்திகள் என்றால் என்ன? அதனை எப்படி செய்தார்கள் என பார்ப்போம்.

முதல் சித்தி அணிமா

பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தியைக் குறிக்கும் என பலரும் சொல்வார்கள்.

பெரியதாக இருக்கின்ற ஒரு பொருளை சிறியதாக மாற்றி காட்டுவதா? இது எப்படி சாத்தியம்? இதையெல்லாம் செய்ய முடியுமா? என்றால் முடியும்.

அதை எப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம், உண்மையை யாரும் தெளிவாக கூறுவது இல்லை, இந்த அணிமா சித்தியை சிறிது அறிவியல் கோணத்தில் அணுக வேண்டிய அவசியம் உள்ளது.  

நம் உடலானது பல கோடி செல்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே, செல்கள் எதனால் கட்டமைக்கப்பட்டது அணுக்களின் கூட்டமைப்பால் ஆனது என்பதையும் நாம் அறிவோம்.

அட்டமா சித்திகளில் முதல் சித்தி - அணிமா | What Is The Anima Siththikal In Tamil  

அடிப்படையில் பிரபஞ்ச பரிணாமத்தில் உள்ள அணைத்து மூலப்பொருட்களும் அணுக்களால் ஆனவை தான்.

சித்தர்கள் தங்கள் உடலை கடுமையான தவங்கள் செய்து தங்கள் உடலை ரசவாத நிலையில் பக்குவமாக மாற்றி தங்கள் உடலில் இயங்கும் ஒவ்வொருவரும் அணுவுக்கும் சக்தியை அதிகப்படுத்துகின்றனர்.

இதனால் அவர்கள் உடல் ஒளியுடலாக மாற்றம் அடைகின்றது.

இதைத்தான் ஒளி தேகம் என பல சித்தர் பாடல்களில் கூறப்பட்டிருக்கும். இந்த ஒளி தேகம் அடையப்பேற்ற சித்தர் பெருமக்கள் தங்களுக்குள் உள்ள அணுவையே தன் மாற்றம் அடைய செய்த வல்லமையால் அவர்களால் மற்ற அணுக்களுடன் எளிதாக தங்களை இணைத்துக் கொள்ளவும் முடியும், அடுத்த அணுக்களின் தண்மையை மாற்றவும் முடியும்.

நாம் அனைவரும் பள்ளியில் தனிம அட்டவனை வரிசையை படித்திருப்போம். ஒரு அணுவுக்குள் அநேக பருப்பொருள்கள் உள்ளது.

அதில் அறிவியல் கண்டுபிடிப்பில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என சில உட்பொருகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  

அட்டமா சித்திகளில் முதல் சித்தி - அணிமா | What Is The Anima Siththikal In Tamil

ஒரு அணுவில் இருந்து மூலத்தை பிரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல, அணுவை பிளந்து தான் அணு மின்சாரம் தயாரிக்கின்றனர்.

அணுகசிவு ஏற்படடால் அருகில் இருக்கும் நகரமே அழிந்து போகும் அபாயம் ஏற்படும், ஹீரோஷிமா நாகசாகி, இதற்கு ஒரு சான்று.

ஆனால் எந்த அறிவியல் கருவிகளும் இல்லாமல் ஒரு அணுவில் இருந்து அதன் தனிமத்தை பிரித்த வல்லமை நம் சித்தர்களையே சேரும். 

இப்போது இதே பார்வையில் அணிமாவை அணுகுவோம். தங்கள் உடலில் இருக்கும் அணுவும் அதன் மூலத்தையும் இயற்க்கையின் உதவியுடன் அறிவின் உயர்வுடன் பிரிக்க முடிந்த சித்தர்களால் எந்தஒரு பொருளில் இருக்கும் அணுக்கூறுகளை கூட்டியும் குறைத்தும் அதன் உருவை மாற்ற முடியும் இதுவே அணிமா சித்தி எனப்படும்.

Hulk, AntMan

பொருட்கள் மட்டுமல்ல அவர்களால் அவர்களின் உருவத்தை கூட மாற்றி காட்டிட முடியும். Hulk, AntMan போன்ற திரைப்படங்களில் வருவது போல செய்ய முடியும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US