நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்மபலன் இருக்கிறது. அது அவர்களுடைய முழு வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் துலாம் ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களுடைய கர்ம பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
துலாம் ராசி எடுத்துக் கொண்டால் இவர்கள் தொழில் ரீதியாக அதிக அளவில் சிந்தனை கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் பணத்தை மையமாக வைத்து செயல்பட கூடியவர்கள். அதேபோல் இவர்களுக்கு வாழ்க்கை துணையின் வழியாக முழு ஆதரவும் வாழ்க்கை துணையால் பொருளாதார வசதிகளும் கிடைக்கக் கூடும்.
இவர்களுக்கு சொந்தமாக தொழில் செய்வது என்பது அதிக அளவில் வெற்றியை கொடுக்கும். ஆனால், ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உயர்வு பதவி கிடைப்பதில் தாமதம் போன்றவை உருவாகும்.
ஆதலால் இவர்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கின்ற பொழுது அந்த அலுவலகத்தை இவர்கள் முழுமையாக நம்புவதை கைவிட வேண்டும். துலாம் ராசி பொருத்தவரை இவர்கள் தேவையில்லாத கெட்ட பழக்கங்களை ஒரு பொழுதும் கையில் எடுக்கக்கூடாது.
சுக்கிரன், குரு மற்றும் சனி கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதால் இவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக இருப்பது மிகவும் நன்மையை தரும். குறிப்பாக வாழ்க்கை துணையை இவர்கள் எப்பொழுதும் எதிர்த்து நிற்க கூடாது. இவர்கள் 25 வயதிற்கு பிறகு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.
அரசியலில் இவர்கள் பெரிய பதவிகளை எதிர்பார்ப்பது பல நேரங்களில் ஏமாற்றத்தை கொடுக்கிறது. சூரிய பகவானை வணங்குவது மற்றும் சூரியனார் கோவிலுக்கு செல்வது இவர்களுக்கு நல்ல பலன்களை தரும்.
துலாம் ராசியை பொறுத்தவரை சரியாக திட்டமிட்டு நிதானமாகவும் அடக்கமாகவும் செயல்பட்டால் இவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வார்கள். மேலும், துலாம் ராசியினர் என்ன விஷயங்கள் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |