கருட புராணம்: இந்த செயலை செய்பவர்களுக்கு மன்னிப்பே இல்லையாம்
இந்த பிரபஞ்சமானது ஒருவர் செய்கின்ற நன்மை, தீமைக்கு ஏற்ப அவர்களுக்கான பலனை அவர்கள் கண்முன்னே கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு அற்புதமான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தான் பலரும் கர்ம வினைகள் என்று சொல்கிறார்கள். அப்படியாக ஒருவருடைய வாழ்க்கை முடிந்த பிறகும் அவர்களுக்கு நடக்கக்கூடிய விஷயங்களை பற்றி கருட புராணத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதாவது இந்து தொன்மவியலில் 18 புராணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த கருட புராணம். இந்த கருட புராணத்தில் ஒருவருடைய நடைமுறை வாழ்க்கையை பற்றி மட்டுமல்லாது அவர்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு என்ன நடக்கும்? அந்த ஆன்மா எங்கே செல்கிறது? என்பதை பற்றி மிகத் தெளிவாக நமக்கு சொல்கிறது.

அதாவது ஒருவர் பூலோகத்தில் நன்மையை செய்து வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் இறந்த பிறகு அந்த ஆன்மாவுக்கு கிடைக்க கூடிய நன்மையும். தீமையை செய்து வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு அவர்களுக்கு கிடைக்க கூடிய தண்டனை பற்றி நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
அப்படியாக, ஒருவர் பூலோக வாழ்க்கையில் பிறருடைய பொருளை திருடி வாழ்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று கருட புராணத்தில் சொல்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த கருட புராணம் விஷ்ணுவுக்கும் பக்ஷி ராஜாவுக்கும் இடையே நடந்த உரையாடலை குறிக்கக்கூடியதே ஆகும். அப்படியாக பூலோக வாழ்க்கையில் ஒருவருடைய பொருட்களை திருடியவர்கள் மிகவும் பாவம் செய்ததாக கருதப்படுகிறது.

அதனால் அவர்களுக்கு மரணத்திற்கு பிறகு எமதர்மராஜாவின் பணியாளர்கள் கயிற்றால் கட்டி நரகத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அதன் பிறகு பலமுறை அவர்களால் கசையால் அடிக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் மயக்கம் அடைந்தால் சுய நினைவு முஷ்டியால் பல வகைகளில் தாக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு கருட புராணத்தில் சொல்கின்ற விஷயங்கள் உண்மையில் இறந்த பிறகு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகளை தாண்டி ஒருவர் தீமைகளை செய்தால் நிச்சயம் அவருக்குரிய தண்டனை எல்லா பிறவியிலும் அனுபவித்தாக வேண்டும் என்பது நிதர்சன உண்மையாக இருப்பதை நாம் நடைமுறை வாழ்க்கையில் உணரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |