தவறியும் இந்த 8 விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?
ஆன்மீக ரீதியாக குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் தொடங்கும் முன் பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது என்று சொல்கிறார்கள். காரணம் ஒரு சிலரின் என்ன அதிர்வலைகள் நாம் செய்யக்கூடிய காரியத்தை பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக நாம் தவறியும் பிறரிடம் சொல்லக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. நாம் கடவுளிடம் வைக்கக்கூடிய எந்த ஒரு பிரார்த்தனையும் பிறரிடம் சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்லும் பொழுது அந்தப் பிரார்த்தனைக்கு சக்தி குறையும் என்று சொல்லப்படுகிறது.
2. வீடுகளில் நடக்கக்கூடிய சுப காரியம் முடிவாகும் வரை மற்றவர்களிடம் பகிரக்கூடாது.

3. கணவன் மனைவி இடையே நடக்கக்கூடிய சண்டை அன்னோன்யம் பற்றி பிறரிடம் பகிரக்கூடாது.
4. நாம் ஒருவருக்கு செய்யக்கூடிய எந்த ஒரு உதவியும் மற்றவர்களிடம் பகிரக்கூடாது.
5. வீடுகளில் நிலம் மற்றும் தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது அதை வாங்கும் வரை ஒருவரிடம் பகிரக்கூடாது.
6. திருமணம் ஆகி தாய்மை அடைந்தவுடன் குறைந்தது மூன்று மாதங்கள் வரை நாம் அதை வெளியில் சொல்லக்கூடாது.
7. அதேபோல் நம்முடைய வருமானம் எவ்வளவு என்று ஒருவரிடம் பகிரக்கூடாது.
8. நாம் செய்கின்ற வேலை மற்றும் வியாபாரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு ஏற்ற இறக்கங்களை பிறரிடம் பகிரக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |