சிதறு தேங்காய் உடைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க
எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பது இந்து மத பாராம்பரியத்தில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும்.
சிதறுகாய் என்று நாம் எறிவது நிவேதனம் என்கிற நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம்.
இறைவன் பார்வைபட்ட பொருளைப் பலருக்கு அளிக்கிறேன். என்பதே அதன் தாத்பர்யமாகும். இந்து மத தத்துவங்களின் அடிப்படையில் ‘சிதறு தேங்காய் உடைவதைப் போல நம் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது’ என்று அர்த்தம்.
மட்டுமன்றி, சிதறு தேங்காய் சிதறுவது போன்று நம் துன்பங்களும் தடைகளும் தோஷங்களும் விநாயகர் அருளால் சிதறிப்போகும் என்றும் கூறுவார்கள்.
தேங்காயை அதன் ஓடு மறைப்பதை போல் அறியாமை எனும் மாயையால் ஜீவாத்மா பரமாத்மாவை உணர முடியாமல் மறைக்கின்றது, இறைவன் சன்னதியில் நம்மிடமிருக்கும் நான் என்ற அகந்தை அழியும் போது நமது ஆன்மா தூய்மையடைகின்றது என்பதை உணர்த்துவதே சிதறு தேங்காய் போடுவதன் தத்துவமாகும்.
செய்யக் கூடாதவை
எப்போதும் சிதறு தேங்காய உடைக்கும் போது ஒன்று, மூன்று என்று ஒற்றைப் படையில் தான் உடைக்க வேண்டும். இரண்டு நான்கு என்று இரட்டைப் படையில் உடைக்க கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
சாஸ்திர்களின் பிரகாரம் பெண்கள் சிதறு தேங்காய் உடைப்பது மறுக்கப்படுகின்றது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டில் கூட தேங்காய் உடைப்பதை தவிர்கும் நடைமுறையை பெரும்பாலான இந்துக்கள் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
எண்ணிக்கையும் பலன்களும்
நினைத்த காரியம் அல்லது செல்லும் காரியம் தடை இன்றி வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால், தடைகளை தகர்த்தெரிய வழிப் பிள்ளையாருக்கு ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பது நல்ல பலனை கொடுக்கும்.
தொழிலில் முன்னேற்றமடைய வேண்டும் என நினைப்பவர்களும் என்று நினைப்பவர்களும், நோயால் வாடுபவர்களும், மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைப்பது நல்லது.
கல்வியில் உயர்வடைய வேண்டும் என்றால், ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சிதறு தேங்காய்களை உடைப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை வழிபடுவது சிறப்பு.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தைகளை பெற்று மகிழ வேண்டும். பெற புதன் கிழமையில் தொடர்ந்து 9 வாரங்களாக 9 தேங்காயை உடைத்து பிள்ளையாரை வழி பட்டால் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஐதீகம்.
பிள்ளையாருக்கு 11 சிதறு தேங்காய் உடைத்தால், நேரத்திகடன் செய்ய, தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.