நீங்கள் பிறந்த தேதி உங்கள் முற்பிறவியை பற்றி சொல்வது என்ன?
இந்த வாழ்க்கை என்பது பல பிறவிகள் உடைய தொடர்ச்சி என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அப்படியாக ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்கள் முற்பிறவையில் எந்த மாதிரியான கர்மவினைகள் செய்திருக்க கூடும்? அவர்கள் இந்த பிறவி எடுப்பதற்கான காரணம் என்ன?
இந்த பிறவியில் அவர்கள் என்னென்ன இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நாம் அவர்கள் பிறந்த தேதியை கொண்டு எண் கணிதம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக ஒருவர் பிறந்த தேதி அவருடைய முற்பிறவி கர்ம வினைகளை பற்றி சொல்வது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
எண் 1, 10, 19, 28:
எண் கணிதத்தில் இந்த எண்களை ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். ஆக இந்த எண்களில் பிறந்தவர்கள் முற்பிறவிகள் தங்களுடைய தலைமைத்துவ குணத்தாலும் பண்பாலும் ஏதேனும் காயங்களை ஒரு சிலருக்கு கொடுக்க நேர்ந்திருக்கலாம். ஆக இவர்கள் இந்த பிறவியில் இவர்களுடைய தலைமைத்துவ பண்பை மிக சரியாக பயன்படுத்தி அன்பாக வழிநடத்தக்கூடிய ஒரு மிகச்சிறந்த தலைவராக இருக்கக் கூடியவர்களாக மாறுவார்கள்.
எண் 2, 11, 20, 29:
இந்த எண்களை ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். சந்திர பகவான் தான் ஒரு மனிதனுடைய உணர்வுகளுக்கு காரணமாக இருக்கி. இவர்களுடைய வாழ்க்கையை முழுவதுமாக குடும்பங்களுக்காகவே அர்ப்பணித்திருக்கக்கூடிய ஒரு நபராக இருந்திருப்பார்கள். குடும்பத்திற்காகவே தியாகம் செய்து வாழ்ந்துவராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
எண் 3, 12, 21, 30:
இந்த தேதியில் பிறந்தவர்கள் முற்பிறவியில் ஒரு சிறந்த ஞானியாகவும் பிறரை வழிநடத்தக்கூடிய ஒரு ஆசிரியராகவும் இருந்திருப்பார்கள். அவர்களுடைய அறிவு திறன் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆணவத்தை கொடுத்திருக்கக்கூடும். ஆதலால் இவர்கள் இந்த பிறவியில் ஒருவரை ஆணவமின்றி அன்பாக வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த மனிதராக இருப்பார்கள் .
எண் 4, 13, 22, 31:
இந்த தேதியில் பிறந்தவர்கள் முற்பிறவியில் நிறைய கஷ்டங்களை வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்திருக்கலாம். ஆக இந்த பிறவியில் அவர்கள் இவர்களை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு இவர்களை பக்குவப்படுத்தி தயார் செய்து கொண்டு இருப்பார்கள்.
எண் 5, 14 23:
இந்த தேதியில் பிறந்தவர்கள் பேச்சாளராக இருந்திருப்பார்கள். இவர்களுடைய பேச்சைக் கொண்டு அவர்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் மிகச் சிறப்பாக விளங்கி இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிதாக கற்றுக் கொள்வதில் சிறந்தவராக இருந்திருப்பார்கள்.
எண் 6, 15, 24:
இந்த தேதியில் பிறந்தவர்கள் அழகில் மிகச்சிறந்தவராக இருந்திருப்பார்கள். இவர்களை பலரும் விரும்பி நேசிக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பார்கள். இருப்பினும் இவர்கள் சில நேரங்களில் ஒரு சிலரை உதாசீனம் செய்திருக்கக்கூடிய நிலை இருப்பதால் இந்த பிறவியில் இவர்கள் அதை சரி செய்து கொண்டு வாழ முள்வார்கள்.
எண் 7, 16, 25:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் முற்பிறவியில் அவர்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தேடிக் கொண்டே இருந்திருப்பார்கள். அவர்கள் எவ்வளவு உழைத்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்திருக்கும். ஆதலால் இந்த பிறவியில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்காக அவர்கள் முற்பிறவியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
எண் 8, 17, 26:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு முற்பிறவியில் இவர்கள் கேட்ட இடங்களில் எல்லாம் இவர்களுக்கு உதவி கிடைத்திருக்கும். ஆதலால் நிறைய நேரங்களில் ஆணவமும் இவர்களுக்கு உடன் வந்திருக்கக்கூடும். ஆதலால் இந்த பிறவியில் இவர்களுக்கு வாழ்க்கை எவ்வாறு வழிநடத்தக்கூடியது என்பதை அறிந்து தன்மையாக நடக்கக்கூடிய நபராக இருப்பார்கள்.
எண் 9. 18, 27:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு முற்பிறவியில் அதிக அளவிலான கஷ்டங்கள் வந்திருக்கும். அதோடு இவர்கள் சமுதாய ரீதியாக நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். ஆதலால் இந்த பிறவியில் இவர்கள் அந்த சமுதாய மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சியிலும் ஒரு நல்ல மனிதராகவும் வாழ முயற்சி செய்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |