நீங்கள் பிறந்த தேதி இதுவா? இறுதியாக 2025ல் உங்களுக்கான கடினமான பாடம்
இந்த 2025 ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாட்களில் முடிய இருக்கின்ற நேரத்தில் கிரக மாற்றங்களால் நிச்சயம் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வகையான பாடங்களை கற்றுத் தெளிந்திருப்பார்கள்.
அந்த வகையில் இந்த 2025ஆம் ஆண்டு ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான வாழ்க்கை பாடத்தை இந்த கிரகங்கள் கற்றுக் கொடுத்திருக்கும்? எவ்வளவு கடினமாக அவர்களுக்கு இந்த ஆண்டு அமைந்திருக்கும்? இந்த 2025 ஆம் ஆண்டிற்கான கடினமான பாடம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
எண்: 1, 10, 19, 28:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு கட்டாயமாக தலைமைத்துவம் பண்பு என்பது நிச்சயமக ஒரு அனுதாபமும் நிறைந்து இருக்க வேண்டும் என்று தெரிந்து இருப்பார்கள். மேலும், எல்லா இடங்களிலும் நம்முடைய ஆதிக்கம் வெற்றியை பெற்று கொடுத்து விடாத என்பதை இவர்கள் மிகச்சரியாக உணர்ந்து இருப்பார்கள்.

எண்: 2, 11, 20, 29:
இந்த தேதியில் பிறந்தவர்கள் சற்று உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆக இவர்கள் இந்த ஆண்டு கட்டாயமாக எவ்வாறு உணர்வுகளை கையாள்வது என்பதையும் ஒரு உறவு என்று எடுத்துக் கொண்டால் அந்த உறவானது நமக்கு ஒரு பாதுகாப்பானதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருக்கக் கூடாது என்று உணர்ந்திருப்பார்கள்.
எண்: 3, 12, 21, 30:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் திறமை மட்டும் இருந்தால் போதாது அந்த திறமையை மிக ஒழுக்கமாக பயன்படுத்தும் பொழுது தான் வெற்றி அடைய முடியும் என்று இவர்கள் கட்டாயம் உணர்ந்து இருப்பார்கள். ஆக ஒழுக்கம் தான் ஒரு மனிதனை மேன்மை அடைய செய்யும் என்ற உண்மை இவர்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கற்றுக் கொடுத்திருக்கும்.
எண்: 4, 13, 22, 31:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக நமக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் நிலையாக உழைக்க வேண்டும் என்ற உண்மை இவர்கள் உணர்ந்து இருப்பார்கள். என்றோ ஒரு நாள் மட்டும் கடினமாக உழைத்தால் போதாது அந்த உழைப்பானது தொடர்ந்து இருந்தால் மட்டுமே நமக்கு வெற்றியை கொடுக்கும் என்று இவர்கள் கட்டாயம் உணர்ந்து இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.
எண்: 5, 14, 23:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ஒரு உறவாக இருக்கட்டும் வியாபாரமாக இருக்கட்டும் ஒரு நிலை தன்மை என்பது அவசியம் தடுமாற்றத்தோடு எந்த விஷயத்தை செய்தாலும் அது நிச்சயம் அவர்களுக்கு கை கொடுக்காது என்பதை இவர்கள் தீர்க்கமாக உணர்திருக்க கூடிய வருடமாக இருக்கிறது. மேலும் நாம் நிலையாக ஒரு விஷயத்தில் ஈடுபாடு செலுத்தாவிட்டால் நிச்சயம் அது நம் கைகளை மீறி சென்றுவிடும் என்றும் இவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.

எண்: 6, 15, 24:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் நெருங்கிய உறவுகளின் வழியாக வலி நிறைந்த பாடத்தை இந்த 2025 ஆம் ஆண்டு கற்றுக் கொடுத்திருக்கும். மேலும் இவர்களுக்கு நம்மை மீறி ஒரு உறவில் ஈடுபாடு செலுத்தும் போது நிச்சயமாக நம்மை அவமானம் அடையக்கூடும் என்பதை இவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
எண்: 7, 16, 25:
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பொறுமை தான் ஒரு மனிதனின் வெற்றி பெற்று கொடுக்கும் என்ற பாடம் கிடைத்திருக்கும். அதாவது பொறுமையாக இருந்தால் ஒருவர் முட்டாளாக இருக்கிறார் என்று அர்த்தமல்ல பொறுமையாக இருப்பதே மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கான ஒரு வழி என்று இவர்கள் தீர்க்கமாக உணர்ந்து இருக்கக்கூடிய வருடமாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |