2026 டிசம்பர் மாத பலன்: மகர ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?
2026 ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் கிரக மாற்றங்களால் மகர ராசிக்கு எப்படி இருக்கிறது என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி ஸ்வாமிகள் அவர்கள் அதை பற்றி பார்ப்போம்.
மகர ராசிக்கு எட்டாம் இடத்திற்குரிய சூரிய பகவான் ஆறாம் இடத்திற்குடைய புதனும் 12 ஆம் வீட்டில் மறைவதால் இவர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் அரசு சார்ந்த பதவிகள் இவர்களுக்கு தேடி வர வாய்ப்பு உள்ளது.
அதேபோல், பொருளாதர நெருக்கடிகள் விலகி தொழில் ரீதியாக பெரிய வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டங்களில் தரித்திரம் நீங்கி விலகுவதால் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலும், அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது.

அதேபோல், குரு எட்டாம் வீட்டில் இருப்பதால் வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.
இவர்களின் பாதகாதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் நீசம் பெறுவதால் கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆதலால் வெளிப்படையாக பேசுவது அவசியம். அதேபோல் ராசியில் ராகு இருப்பதால் வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.
உங்களுக்கு எதிர்மறையாக இருக்கக்கூடிய சமூக தொடர்பையும் தவிர்ப்பது நல்லது. இவர்கள் டிசம்பர் மாதம் 1, 2, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கவனமாக செயல்படுவது அவசியம். மேலும், மகர ராசியினர் டிசம்பர் மாத பலன்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |