சனிபெயர்ச்சி எப்பொழுது.. வாக்கிய பஞ்சாங்கமா? திருக்கணித பஞ்சாங்கமா? எதை பின்பற்றலாம்
இந்து மதத்தில் ஜோதிடம் பார்ப்பது என்பது காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பண்டைய காலங்களில் அரசர்கள், ரிஷிகள் என எல்லோரும் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாட்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்ததும் உண்டு. அதன் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டம் வரை நாம் ஜோதிடம் பார்த்து வருகின்றோம்.
பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாத பொழுதும் அவர்களுடைய ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களை நமக்கு துல்லியமாக கணித்து அளித்ததை பஞ்சாங்கம் என குறிப்பிடப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு கோவில்களிலும் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என ஒவ்வொன்றையும் கடைப்பிடிக்கின்றன. அந்த வகையில் இதில் எது சிறந்தது? என்று பலருக்கும் குழப்பங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

உலகப் புகழ் பெற்ற திருக்கோவிலான திருப்பதியில் திருக்கணித பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி இருக்க மார்ச் 6ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. இதை நாம் கடைபிடிக்க வேண்டுமா என்பதை பற்றி பார்ப்போம்.
பலருக்கு வாக்கிய பஞ்சாங்கம் என்பது பழமையானதாகவும், திருக்கணித பஞ்சாங்கம் என்பது புதியதாகவும் ஒரு எண்ணம் இருக்கின்றது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் முறை வருவதற்கு முன்னதாகவே திருக்கணித பஞ்சாங்கம் முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.
அதாவது ஆரியபட்டா, பாஸ்கரா உள்ளிட்டோரின் காலங்களிலே திருக்கணித பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்து இருக்கிறது. ஆனால் அதை கணிக்க சற்று கடினமாக இருந்ததால் அதை எளிமையாக்கும் வகையில் ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்கம் என பஞ்சாங்கத்தை எளிமைப்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.
அதில் அவர்கள் சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தத்தை கொடுத்தார். சூரிய சித்தாந்தம் வட இந்தியாவிலும், ஆரிய சித்தாந்தம் தென் பகுதியிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த குழப்பங்களுக்கு ஒரு முறை காஞ்சி பெரியவரும் ஒரே வார்த்தையில் சரியான ஒரு தீர்வு சொல்லிருக்கிறார்.
அதாவது, கோயில்களில் நடக்கக்கூடிய பூஜைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கம் முறை படியும் மனிதர்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் அடிப்படையிலும் பின்பற்றுவது சரியானது என்று சொல்லியிருக்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |