உங்களுக்கான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் தேவதை எண் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பிறந்த தேதிக்கு ஏற்ப அவர்களுக்கு கோடீஸ்வரன் எண் இருக்கிறது. இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில் கணித்து பின்பற்றக்கூடிய ஒன்றாகவும். அப்படியாக நீங்கள் பிறந்த தேதிக்குரிய கோடீஸ்வரர் எண் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
எண் 1 (சூரியன்):
இந்த எண் ஒருவருக்கு மிகச்சிறந்த தலைமைத்துவ பண்பையும் அதிகாரத்தையும் புகழ் மற்றும் செல்வாக்கையும் பெற்றுக் கொடுக்கும்.
எண் 5 (புதன்):
இந்த எண் தொழில் ரீதியாக அதிக அளவில் செல்வத்தை சேர்க்கக்கூடிய வாய்ப்புகளையும் புத்திசாலித்தனம் மற்றும் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய தன்மையையும் பல வழிகளில் பணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

எண் 6 (சுக்ரன்):
இந்த எண் ஒருவருக்கு ஆடம்பரம் செல்வம், வசதி வாய்ப்புகள், கலை சினிமா, நகைக்கடையில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும்.
எண் 8 (சனி):
எண் 8 என்பது சனிபகவானுக்கு உரிய எண் ஆகும். இந்த எண் மெதுவாக வேலை செய்தாலும் நிலையான மற்றும் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகத்தை பெற்றுக் கொடுக்கும்.
எண் 9 (செவ்வாய்):
எண் 9 செவ்வாய் பகவானுடன் தொடர்புடையது. தைரியம் மற்றும் அதிரடியாக முடிவு எடுக்கக் கூடிய தன்மை, மற்றும் தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளில் லாபம் அரசியல் மற்றும் தொழில் போன்ற துறைகளில் செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

சிறப்பு “தேவதை எண்கள்”:
111 → புதிய தொடக்கம் மற்றும் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும்.
222 → சரியான பாதையில் பயணம் செய்து நிலையான செல்வத்தை பெற உதவியாக இருக்கும்.
333 → நல்ல வளர்ச்சி மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க உதவியாக இருக்கும்.
444 → பாதுகாப்பு மற்றும் நிலையான பண வரவை கொடுக்கும்.
555 → வாழ்க்கையில் முன்னேற்றம் திடீர் மாற்றங்களை கொடுக்கும்.
888 → மிகப்பெரிய அளவில் செல்வத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் பெற்றுக் கொடுக்கும்.
இந்த எண்களை எப்படி பயன்படுத்தலாம்: அதாவது நாம் பிறந்த தேதியை கணக்கிட்டு அதற்கேற்ற எண்களை நாம் பயன்படுத்தலாம். மொபைல், வாகனம், வீட்டு எண் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கிய வேலைகள் செய்யும் பொழுது இந்த எண்ணை பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.