உங்கள் பிறந்த தேதி இதுவா? இராமாயணத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
எண் கணிதத்தில் ஒருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அவருடைய குணாதிசயங்கள் வாழ்க்கை வரைமுறைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் பிறந்த எண் கொண்டு அந்த நபர் ராமாயணத்தில் எந்த கதாபாத்திரம் கொண்டவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29):
இந்த தேதியில் பிறந்தவர்கள் சீதா தேவியின் சந்திரனின் அம்சம் உடையவர்கள். இவர்கள் மிகுந்த பொறுமை, அன்பு, அமைதி, மன வலிமை கொண்டவர்கள். சந்திரன் ஆதிக்கம் இருப்பதால் இவர்கள் மென்மையாக நடந்து கொள்வார்கள். அதை போல் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள்.
எண் 3 (பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30):
இந்த தேதியில் பிறந்தவர்கள் வசிஷ்ட முனிவர் குரு அம்சத்தை உடையவர்கள். இவர்கள் ஞானத்திலும் ஒருவருக்கு அறிவுரை சொல்வதிலும் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்க கூடியவர்கள். குருவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் இவர்கள் சிறந்த அறிவாளியாகவும் மற்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கக்கூடியவர்கள்.

எண் 4 (பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31):
இந்த எண்ணில் பிறந்தவர்கள் கும்பகர்ணனை ராகுவின் அம்சத்தை கொண்டவர்கள். இவர்கள் அசாத்திய பலம் மிக்கவர்களாகவும் தனித்துவமான சிந்தனை கொண்டவர்களாகவும் விசுவாசமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
எண் 5 (பிறந்த தேதிகள்: 5, 14, 23):
இந்த எண்ணில் பிறந்தவர்கள் லட்சுமனின் அம்சத்தை பெற்றிருக்கிறார்கள். அதாவது புதன் பகவானின் ஆதிக்கம் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு இருக்கும். அதனால் இவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாகவும் வேகம், விவேகம், அண்ணன் மீது அதிகப்பற்று சுறுசுறுப்பாக செயல்பட கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |