ஜாதகப்படி உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள் தெரியுமா ?

By Sakthi Raj Aug 14, 2026 01:32 PM GMT
Report

ஜோதிட ரீதியாக புதன் பகவான் எழுத்து, ஆற்றல் ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். அந்த வகையில் புதன் பகவான் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறாரோ அதற்கு தகுந்தார் போல் நம்முடைய வாழ்க்கையில் பலன்கள் மாறும்.

அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் 5,9,11 ஆம் இடங்களில் புதன் பகவான் அமர்ந்திருக்கும் பொழுது அவர்களுக்கு மிகவும் லாபகரமான நிலையை பெற்றுக் கொடுக்கிறது.

மேலும், இவர்களிடம் அதிக அளவில் உதவும் மனப்பான்மை இருக்கும். அதுமட்டுமல்லாமல் நீண்ட காலம் இவர்களுடன் உண்மையான நட்பு இருக்கும் அமைப்பு உண்டு.

ஜாதகப்படி உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள் தெரியுமா ? | What Kind Of Friends You Attract To Your Horoscope

2026 ஆடிப்பூரம்: அம்மனுக்கு எந்த நிற வளையல் சாற்றினால் என்ன பலன்?

2026 ஆடிப்பூரம்: அம்மனுக்கு எந்த நிற வளையல் சாற்றினால் என்ன பலன்?

அவர்களால் இவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். உண்மை நட்பு இவர்களை சுற்றிலும் எப்பொழுதும் இருக்கும். அதே போல், 6, 8, 12 ஆம் வீடுகளில் புதன் பகவான் இருந்தால் இவர்களுக்கு மறைமுக எதிரிகள் நண்பர்கள் போல் பழகுவார்கள்.

அவர்களிடத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நட்பு வட்டாரம் குறைவாகவோ அல்லது நட்புகளால் மனஸ்தாபம் ஏற்படலாம். அதேபோல் 1, 4, 7, 10 ஆம் வீடுகளில் புதன் பகவான் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு அறிவார்ந்த பேச்சாற்றல் கொண்ட நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல அந்தஸ்து உள்ளவர்களின் நட்பு உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US