2026 ஆடிப்பூரம்: அம்மனுக்கு எந்த நிற வளையல் சாற்றினால் என்ன பலன்?
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது அந்த வகையில் இந்த ஆடிப்பூர தினத்தன்று நாம் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
அப்ப்ட்டியாக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆடிப்பூரம் வழிபாடு செய்யப்படுகிறது. அந்த நாளில் அம்மனுக்கு எந்த நிற வளையல் சாற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
சிவப்பு:
நாம் சிவப்பு நிற வளையல் சாற்றி வழிபாடு செய்தால் சக்தி, ஆரோக்கியம், துணிவு மற்றும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பச்சை:
குடும்பத்தில் செல்வ வளம், குடும்ப அமைதி, புதிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
மஞ்சள்:
மிகவும் மங்களகரமான காரியம் நடக்கும், திருமண யோகம் கைகூடி வரும், வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
நீலம்:
கண் திருஷ்டி நீங்கி மன அமைதி மன குழப்பம் விலகும்.

வெள்ளை:
மன அமைதி மன சாந்தி கிடைக்கும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டு. நல்ல தீர்மானம் கிடைக்கும்.
ஊதா:
கல்வியில் வெற்றியும் ஞானம் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
ஆரஞ்சு:
நல்ல நேர்மறை ஆற்றல் உற்சாகம் தொழிலில் முன்னேற்றம் பணவரவு அதிகரிக்கும்.
ரோஜா நிறம்:
அன்பு குடும்பத்தில் பாசம் உறவுகளிடையே இனிமை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |