கடவுள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவார்?
நாம் என்னதான் இறைவனை நொடி பொழுது விடாமல் வேண்டிக்கொண்டாலும்,பல நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்தாலும் இறைவன் மனம் மகிழும் நேரம் என்று ஒன்று உள்ளது.அதை பற்றிய ஒரு சிறு ஆன்மீக கதை பார்ப்போம்.
ஒரு ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.அவர் ஒரு நாள் அவர் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை தன் பணியாளரிடம் கொடுத்து கோவிலில் கொடுக்க சொன்னார்.அவரும் வாழைக்குலையை வாங்கி கொண்டு கோயிலுக்கு நடக்க ஆரம்பிக்கிறார்.
கோயில் அவர்கள் தோட்டத்தில் இருந்து சற்று தூரம் அதிகம்.நடந்து செல்லும் வேளையில் அந்த ஏழை பணியாளருக்கு பசி வயிற்றை கிள்ளியது.என்னசெய்வது என்று தெரியாமல் பசியை அடக்கி கொண்டு செல்கிறார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு அவரால் பசி தாங்க முடியமால் கையில் இருந்த வாழைக்குலையில் இருந்து இரண்டு வாழைப்பழம் எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதி பழங்களை கோயிலில் கொடுத்தார்.ஆனால் அன்று இரவு அந்த செல்வந்தருக்கு ஒரு கனவு.
அந்த கனவில் இறைவன் தோன்றி எனக்கு நீ கொடுத்த இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டேன்.மிகவும் ருசியாக இருந்தது என்று சொன்னார்.செல்வந்தருக்கு ஒரே கோபம்.நாம் ஒரு குலை வாழப்பழம் கொடுத்திருக்க கடவுளிடம் வெறும் இரண்டு வாழைப்பழம் சேர்ந்திருக்கிறது.மீதம் உள்ள பழம் என்னாயிற்று என கடும் சினம் கொண்டார் அந்த செல்வந்தர்.
மறுநாள் விடிந்ததும் அந்த பணியாளை அழைத்து நேற்று என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கினர்.மாறி மாறி செல்வந்தர் அந்த பணியாளை கேள்வி கேட்க அவரும் நான் தான் செல்லும் வழியில் கடும் பசி தாங்கமுடியாமல் இரண்டு வாழை பழம் சாப்பிட்டேன் என்று சொல்ல,அப்பொழுது தான் செல்வந்தருக்கு புரிந்தது.
கடவுள் இவர் சாப்பிட இரண்டு பழம் மட்டுமே இறைவனை சென்று அடைந்தது என்று.ஆக இறைவன் மிக எளிமையான விஷயத்திற்கே மனம் மகிழ்வார்.எவர் ஒருவர் பிறர் மனதை புரிந்து கொண்டு அவர்களின் துயரம் தீர்க்கிறார்களோ அவர்களிடத்தில் கடவுள் தங்குவார்.
அவர்களை தான் கடவுளுக்கு பிடிக்கும்.ஆக சிறந்த பக்கதியானது சக மனிதனின் துன்பத்தை போக்கி நம்மால் முடிந்ததை பகிர்ந்து உண்பதே ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |