ஜோதிடம் என்பது நம்மை நாமே தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு வழிகாட்டியாகும். மேலும், ஜோதிடத்தில் 9 கிரகங்கள் இருக்கிறது. இந்த 9 கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியாக இந்த கிரகங்களுடைய அமைப்பை பொறுத்துதான் ஒருவருடைய வாழ்க்கை முறை அமையும். அந்த வகையில் ஜாதக அமைப்பின் படி யார் என்ன வேலை செய்யக்கூடிய நபராக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

1.சூரியன்: சூரியன் தான் ஒருவருக்கு அரசு வேலை, அரசியல், மருத்துவம் சட்டம் தலைமை பொறுப்புகளை வழங்கக்கூடியவர்.
2. சந்திரன்: மீன் பிடிப்பது, சமையல், கலைஞர் , செவிலியர், நீர் சார்ந்த தொழில்கள் உணவகம், வணிகம் போன்றவை வழங்க கூடியவர்.
3. செவ்வாய்: ராணுவம் காவல்துறை, சர்ஜரி, ரியல் எஸ்டேட் போன்றவற்றை வழங்க கூடியவர்.
4. புதன்: எழுத்து, கணிதம், வணிகம், ஆசிரியர், தகவல் தொழில்நுட்பம், ஜோதிடம் ஆகியவை கொடுக்க கூடியவர்.
5. குரு: ஞானம், கல்வி, ஆசிரியர், பேராசிரியர் வங்கி சட்டம் நீதிபதி ஆலோசகர் போன்றவற்றை குரு பகவான் வழங்கக்கூடியவர்.
6. சுக்கிரன்: அழகு விஷயங்கள் அதாவது கலை, இசை, நடனம் நடிப்பு சினிமா ஹோட்டல் தொழில் போன்றவை வழங்க கூடியவர்.

7. சனி: இரும்பு, நிலக்கரி, சுரங்கம், இயந்திரங்கள் தோள் பொருட்கள், உழைப்பு சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட் சட்டம் கொடுக்கக்கூடியவர்.
8. ராகு: அரசியல், ஊடகம், கணினி, மருத்துவத்துறை , புதுமையான தொழில்நுட்பங்களை, படிக்க காரணியாக இருக்கக் கூடியவர்.
9. கேது: ஆராய்ச்சி. ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், தியானம் போன்றவற்றில் ஆர்வம் வழங்க கூடியவர்.
ஆக, ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு விதமான தனி பண்புகளை பெற்றிருக்கிறார்கள. அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக வலிமையுடன் அதாவது உச்சம் ஆட்சி நட்பு பெற்றிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய தொழிலை அந்த ஜாதகர் செய்வார்கள்.
அது மட்டுமில்லாமல் அந்த தொழிலை அவர்கள் தேர்ந்தெடுப்பதன் வழியாக மிகப்பெரிய உயரத்தையும் அவர்கள் பெற்றுவிடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |