மகர ராசியில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்.. ஜாக்பாட் அடிக்க போகும் 4 ராசிகள்
ஜோதிட நிலவரப்படி தற்போது மகர ராசியில் சூரியனும் சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். இவர்களுடன் செவ்வாய் பகவானும் இணைகிறார். இதனால் மகர ராசியில் திரி கிரக யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய யோகமாக பார்க்கப்படுகிறது.
மேலும், செவ்வாய் பகவான் தன்னுடைய உச்ச ராசியில் இருப்பதால் இரட்டை ராஜயோகமும் உருவாகும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டங்களில் மனரீதியான அழுத்தம் குறையும். அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். உங்களுக்கு பணி இடங்களில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் உருவாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு அவர்களுடைய ஏழாவது வீட்டில் இந்த இரட்டை ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எல்லாம் கைகூடிவரும். சமுதாயத்தின் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு ஐந்தாவது வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகிறது. இதனால் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தைகள் வழியாக புகழ் அடைவீர்கள். உங்களுடைய கலை திறன் மிகச் சிறப்பாக வெளிப்படும். காதல் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு முதல் வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த இவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த தன்னம்பிக்கையும் தைரியமும் எதையும் எதிர்த்து போராடக்கூடிய நம்பிக்கையும் பிறக்கும். வழக்குகள் எல்லாம் சாதகமாக அமையும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். முக்கிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |