நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? நீங்க எந்த விலங்கின் குணத்தை கொண்டவர் தெரியுமா?

By Sakthi Raj Jun 19, 2026 11:24 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொருவர் பிறந்த எண்ணிற்கும் ஒரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எந்த விலங்கின் குணாதிசயங்கள் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

எண் 1 (1, 10, 19, 28) – சிங்கம்:

இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகம் சூரியன். அதனால் இவர்கள் ஒரு சிங்கத்தை போல் பிறவியிலே ஆளுமை குணத்தை பெற்று இருப்பார்கள். தனித்து வாழவும் விரும்புவார்கள். எந்த ஒரு விஷயத்திற்காகவும் பயம் கொள்ள மாட்டார்கள். சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? நீங்க எந்த விலங்கின் குணத்தை கொண்டவர் தெரியுமா? | Whats Your Animal Personality According Birth Date

ஜோதிடம்: இந்த ராசி பெண்களிடம் சாமர்த்தியம் பலிக்காதாம் யார் தெரியுமா?

ஜோதிடம்: இந்த ராசி பெண்களிடம் சாமர்த்தியம் பலிக்காதாம் யார் தெரியுமா?

எண் 2 (2, 11, 20, 29) – மான்/புறா:

சந்திரனின் ஆதிக்கத்தை கொண்டுவர் இவர்கள். அதை போல் இவர்கள் மான் போல் மிகவும் மென்மையானவர்கள், அமைதியானவர்கள், அன்பானவர்கள், கற்பனை திறன் கலை உணர்வை இவர்கள் இடத்தில் அதிகம் காணப்படும். பிறருடைய உணர்வை புரிந்து நடந்து கொள்வார்கள். இருப்பினும் அதிக அளவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் .

எண் 3 (3, 12, 21, 30) – யானை:

இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக குரு பகவான் இருக்கிறார். இவர்களிடத்தில் ஒரு யானையை போல் ஒரு வலிமையும் ஒரு சிறந்த அறிவாற்றலும் இருக்கும். இவர்கள் யானையைப் போல் இவர்களுடைய கொள்கைக்கு ஏதாவது தீங்கு வந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? நீங்க எந்த விலங்கின் குணத்தை கொண்டவர் தெரியுமா? | Whats Your Animal Personality According Birth Date

எண் 4 (4, 13, 22, 31) – நரி/காளை:

ராகு பகவானின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் இவர்கள். அதை போல் நரி போன்று தந்திரமும் அதே புத்திசாலித்தனமும் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப இவர்களை மாற்றிக் கொள்வார்கள். அதை போல் கடின உழைப்பாளியாகவும் பிடிவாதக்காரராகவும் இருப்பார்கள். 

எண் 5 (5, 14, 23) – குரங்கு/சிறுத்தை:

புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற இவர்கள் குரங்கை போல் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வேடிக்கையாகவும் இருப்பார்கள். அதேபோல் இவர்களால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. நிறைய மாற்றங்களை விரும்பக் கூடியவர்கள். சிறுத்தைக்கான வேகமும் கூர்மையான புத்தியும் காணப்படும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US