இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம்

By Sakthi Raj Jun 19, 2026 06:09 AM GMT
Report

இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இது அவர்களுடைய எத்தனாவது பிறவி என்று அறியாத ஒன்று. அப்படியாக, இன்னும் ஒரு பிறவி நமக்கு உண்டா? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால், பல ஆன்மீக அன்பர்கள் பிறவா வரம் வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுண்டு. அவ்வாறே அவர்கள் பிரார்த்தனையும் செய்வார்கள். அப்படியாக, மறு பிறவி யாருக்கு இல்லை? என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம் | Few Sign That This Is Your Last Birth

1. அவர்களுடைய மனதில் தேவை இல்லாத ஆசை, கோபம், களவு, காமம் போன்ற விஷயத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மனம் முழுவதும் இறைவனே நிறைந்திருக்கும் படி வழிபாடு செய்வார்கள். அவர்களோடு நோக்கம் இறைவனை சரணடைவது மட்டுமாகவே இருக்கும்.

2. எல்லா உயிர்களையும் சமம் என்று கருதுவார்கள். யாரிடமும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்க மாட்டார்கள். சிறு உயிராக இருந்தாலும் அதை மதித்து வாழ்வார்கள். எல்லாம் இறைவனுடைய படைப்பு என்று உணர்தலோடு வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

3. எந்த நேரத்திலும் தேவையில்லாத விஷயங்களை பேச மாட்டார்கள். பேசுகின்ற விஷயங்கள் ஒரு ஆன்மாவை மேன்மைப்படுத்துவதற்கான ஒரு செயலாக மட்டுமே இருக்கும். இறைவனைப் பற்றி பேசுவார்கள். அவருடைய புகழை எடுத்துச் சொல்வார்கள் .இதுவே அவர்களுடைய வேலையாக இருக்கும்.

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம் | Few Sign That This Is Your Last Birth

4. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்கின்ற ஒரு மனப்பக்குவத்தை பெற்றிருப்பார்கள். அதேபோல், சக மனிதர்களிடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை சகித்து செல்வதற்கான பண்பு பெற்றிருப்பார்கள்.

5. அவர்களுடைய ஆன்மா அவர்களை அறியாமல் ஒரு பிடிவாதம் கொண்டிருக்கும். பிறவா வரம் வேண்டும் என்பதே ஆகும். ஆதலால். அந்த பிறவா வரம் பெறுவதற்கு எவ்வளவு நல்ல செயல்களை செய்து இறைவனை சரணடைய முடியுமோ அதை மட்டுமே அவர்கள் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US