2025 ராம நவமி எப்பொழுது? அன்று நாம் என்ன செய்யவேண்டும்?
கிருஷ்ணரின் அவதாரமான ராமர் பிறந்த தினம் தான் ராம நவமி ஆகும். இந்த வருடம் 2025 ராம நவமி வரும் 6 ஆம் தேதி அதிகாலை 1.08 மணி முதல் அடுத்த நாள் 7ஆம் தேதி அதிகாலை 12.25 மணி வரை இருக்கிறது. இந்த தினம் நம்முடைய வழிபாட்டிற்கு உரிய சிறப்பான தினம் ஆகும்.அப்படியாக, இன்றைய நாளில் நாம் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
கிருஷ்ணரின் தசாவதாரத்தில் ராமரை கொண்டாடுவதற்கு காரணம், ராமர் மனித பிறவி எடுத்து அதில் மனிதர்கள் சந்திக்கும் அனைத்து சிக்கல்களையும் சந்தித்து, அதை போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமர் வெற்றியின் அடையளமாக பார்க்க படுகிறார். அவரை வழிபாடு செய்ய வாழ்க்கையில் இன்னல்கள் விலகி வெற்றிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், ராமரின் தந்தையின் தசரத சக்கரவர்த்தி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவமிருந்து ராமரை பெற்று எடுத்தார்.
அதனால் நீண்ட நாட்களாக குழந்தைக்கு காத்திருப்பவர்கள் ஸ்ரீ ராமரை ராமநவமி அன்று வழிபாடு செய்வது அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும். அவ்வாறு, குழந்தை பாக்கியம் வேண்டி வழிபாடு செய்ய விரும்புபவர்கள், ராமநவமி தினத்தில் காலையில் எழுந்து குளித்து மனதார ராமரை நினைத்து விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபாடு தொடங்கலாம்.
பிறகு ராமருக்கு பிடித்த நெய்வேத்தியம், பால் பாயாசம் அதை செய்து நெய்வேத்தியமாக படைப்பது சிறந்தது. முடியாதவர்கள் பழம் பால் படைத்து வழிபாடு செய்யலாம். மேலும், அன்றைய தினம் முழுவதும் ராம நாமம் உச்சரிப்பது நமக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும்.
பிறகு காலை அல்லது மாலை அருகில் இருக்கும் ராமர் ஆலயம் சென்று வழிபாடு செய்து ராமருக்கு துளசி மாலை சாத்துவது நமக்கு வெற்றியை தரும். ராமர் அவர் நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமரை அவருடைய பிறந்த நாளான ராமநவமியில் அவரை நினைத்து வழிபாடு செய்வது வாழ்க்கையில் நல்ல திருப்பம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |