2025 வைகுண்ட ஏகாதசி எப்பொழுது? இந்த வழிபாடு செய்தால் சொர்க்கம் நிச்சயமாம்
பெருமாள் வழிபாடுகளில் ஏகாதசி வழிபாடு என்பது மிகச் சிறந்த பலனை கொடுக்கக் கூடிய ஒரு நாளாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு தனித்துவமான தன்மையைக் கொண்டது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி என்பது ஒருவர் செய்த பாவங்கள் விலகி அவர்கள் நேராக சொர்க்கம் செல்வதற்கான ஆசிர்வாதம் பெறக்கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்பொழுது வருகிறது?அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாடுகளும் விரத முறைகளை பற்றியும் பார்ப்போம்.

வைகுண்ட ஏகாதசி இந்த வருடம் டிசம்பர் 30-ம் தேதி அன்று வழிபாடு செய்ய இருக்கிறது. அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் நிறங்களில் ஆடை மலர்கள் சந்தனம் மற்றும் இனிப்பு வகைகளை வைத்து விளக்கேற்று வழிபாடு செசெய்தால் நம் வாழ்க்கையில் உள்ள தடைகளை விலக பெருமாளின் முழு அருள் கிடைக்கும்.
அது மட்டும் அல்லாமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றும் பொழுது நெய் தீபம் ஏற்றுவது ஒரு மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒருவர் வீடுகளில் செல்வ வளம் உண்டாக அவர்கள் புதிதாக ஒரு துளசி செடியை நட்டு வைக்கலாம் அல்லது துளசி செடி வைத்திருப்பவர்கள் துளசி வழிபாடு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
பெருமாளுக்கு துளசி என்பது மிகவும் பிடித்தமான மற்றும் மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால் அன்றைய தினம் துளசி தேவிக்கு தண்ணீர் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது நமக்கு மகாலட்சுமியின் அருளையும் பெற்று கொடுக்கும். மிக முக்கியமாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தான் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இந்த சொர்க்கவாசல் நிகழ்வுகளில் நாம் பங்கு கொள்ளும் பொழுது நம்முடைய பாவங்கள் விலகி நாம் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அருள் கிடைப்பதாகவும் இந்த சொர்க்கவாசல் தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு புதிதான பாதை தடையின்றி பிறக்கும் என்பது ஐதீகம்.
அதோடு மிக முக்கியமாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பிராமணர்களுக்கு அல்லது ஏழை எளிய மக்களுக்கு முடிந்த அளவிற்கு உதவிகள் செய்வது என்பது ஒரு மிகச்சிறந்த பலன் கிடைக்கும். பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்து வழிபாடு செய்பவர்கள் பெருமாளுடைய மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்து வரும்பொழுது அவர்கள் நினைத்த காரியம் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் என்பது தீராத உண்மையாக இருந்து வருகிறது.
ஆக இந்த வருடம் வைகுண்ட ஏகாதசியை தவறவிடாமல் அன்றைய தினம் பெருமாள் வழிபாடு செய்து வாழ்க்கையில் மோட்சம் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |