2026: சித்ரா பௌர்ணமி எப்பொழுது: அந்த நாளிற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள் ?

By Sakthi Raj Apr 17, 2026 05:51 AM GMT
Report

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வருவது இயல்பு என்றாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமி தினம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கியமான பண்டிகைகள் சித்ரா பௌர்ணமியும் ஒன்று.

அந்த வகையில் இருந்து 2026 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்பொழுது வருகிறது? அன்று என்ன செய்ய வேண்டும்? அந்த நாளின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமி சிறப்புகள் :

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திர பகவான் நுழையும் அந்த தினத்தையே நாம் சித்ரா பௌர்ணமி ஆக கொண்டாடுகிறோம். நம்முடைய சாஸ்திரங்களில் மனிதர்கள் செய்யக்கூடிய பாவ புண்ணிய கணக்குகளை வைத்திருப்பவரும் கடந்த கால பாவங்களிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவராகவும் இருக்கும் சித்திரகுப்தரை வழிபடுவதற்கு ஏற்ற உகந்த நாளாக இருக்கிறது.

2026: சித்ரா பௌர்ணமி எப்பொழுது: அந்த நாளிற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள் ? | When Is 2026 Chitra Pournami Date And Worship Time

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

அந்த வகையில் சித்ரா பௌர்ணமி அன்று செய்யப்படும் வழிபாடுகளால் நமக்கு இறை அருள் கிடைப்பதோடு நம்முடைய பாவங்கள் விலகி நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை பெறலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு மனிதர் வாழக்கூடிய குறிப்பிட்ட நாளில் அவர்கள் செய்யக்கூடிய நன்மை தீமை இதையெல்லாம் சித்திரகுப்தர் சேகரித்து வைத்துக் கொள்வார் என்று காலம் காலமாக நம்பக்கூடிய ஒரு விஷயம்.

அதாவது நாம் இறந்த பிறகு நாம் செய்யக்கூடிய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு சொர்க்கம் அல்லது நரகம் என்று தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் பல நேரங்களில் வாழ்க்கையில் நாம் அறியாமல் செய்யக்கூடிய தவறுகள் தான் மிகப்பெரிய பாவமாக மாறிவிடுகிறது.

அவ்வாறு தெரியாமல் செய்த பாவத்திற்கு விமோசனம் பெறக்கூடிய நாளாக இந்த சித்திர பௌர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் சித்திரகுப்தரை மனம் உருகி வழிபாடு செய்தால் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

2026: சித்ரா பௌர்ணமி எப்பொழுது: அந்த நாளிற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள் ? | When Is 2026 Chitra Pournami Date And Worship Time

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டியவை:

1. மனிதன் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்திக் கொண்டால் கட்டாயம் அவனுக்கு தெய்வீக ஆற்றல் கிடைப்பதோடு தெய்வங்களுடைய முழு அருளையும் பெறலாம். அதனால் அந்த நாளில் நாம் புனித நீர்களில் நீராடுவது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

2. மேலும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரையும், சிவபெருமானையும் வழிபாடு செய்தால் மன அமைதியும் வாழ்க்கையில் மோட்சமும் நம்முடைய பாவங்களும் விலகும்.

3. சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மாலை நேரத்தில் சந்திரனையும் வழிபாடு செய்தால் நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் பெறலாம்.

4. ஏழை எளியவர்களுக்கு உணவு உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை தானம் செய்வதாலும் நம்முடைய பாவங்கள் எல்லாம் கரைகிறது.

5. ஒரு சிலர் சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். இதனால் நம்முடைய பாவங்கள் தீர்ந்து நம்முடைய ஆன்ம சிந்தனை அதிகரித்து புண்ணியத்தை தரும் என்று நம்பப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US