2026: யுகாதி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

By Sakthi Raj Mar 10, 2026 04:29 AM GMT
Report

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான கலாச்சார பண்டிகைகளில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இருக்கிறது. இது சந்திரன் மற்றும் சூரியனின் நிலைகளை வைத்து கொண்டாட கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகை சைத்ர மாதம் எனப்படும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அதாவது சைத்ர மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பண்டிகையை கொண்டாடப்படுவது வழக்கம்.

புராண கதைகளின் படி பிரம்ம தேவருக்கு இந்த உலகை எவ்வாறு உருவாக்குவது என்ற குழப்பம் முதலில் இருந்திருக்கிறது. அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவருக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. அதனால் பல சூரிய ஆண்டுகள், யுகங்கள் கடந்து அவர் கடும் தவம் புரிந்தார்.

அந்த தவத்தின் பலன் ஆக தான் அவருக்கு உலகை படைக்கும் வழி பிறந்தது. அவர் தனது தவத்தின் பயனாக உலகை படைக்க துவங்கிய தினத்தையே யுகாதி பண்டிகையாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றோம்.

2026: யுகாதி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? | When Is 2026 Ugadi Festival Date And Timings 

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

யுகாதி 2026 தேதி, நேரம் :

அப்படியாக 2026 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகை மார்ச் 19ஆம் தேதி அன்று காலை 6. 52 மணிக்கு தொடங்கி மார்ச் 20ஆம் தேதி காலை 4. 52 மணி வரை இருக்கிறது. தென்னிந்தியாவான ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இது கலாச்சார பண்டிகையாக மட்டுமல்லாமல் ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த நாளாகவும் இருக்கிறது. அதாவது வசந்த காலத்தில் புதிய துவக்கமாகவும் விவசாய பணிகளை துவங்குவதற்குரிய காலத்தையும் குறிக்கின்ற வகையில் இந்த யுகாதி கருதப்படுகிறது.

அதைப்போல் மரங்களில் இருக்கக்கூடிய பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விட துவங்கும் காலம் என்பதால் நம் கடந்த காலங்களை மறந்து புதிய விஷயங்களை வரவேற்று புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதை குறிக்கக்கூடிய நாளாகவும் இது யுகாதி பண்டிகை இருக்கிறது.

2026: யுகாதி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? | When Is 2026 Ugadi Festival Date And Timings

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

யுகாதி கொண்டாடும் முறை:

யுகாதி பண்டிகை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சுத்தமாக குளித்து புதிய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு புதிய பூக்கள் மா, இலை தோரணங்கள் ஆகியவை கொண்டு வீட்டை அலங்கரித்து கொள்ள வேண்டும்.

யுகாதி பண்டிகை அன்று மிக முக்கியமாக பஞ்சாங்கம் படிக்கும் சடங்கு இருக்கிறது. அதாவது வர இருக்கும் ஆண்டில் மழை, செழிப்பு, விவசாயம் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்து தெரிந்து கொள்வார்கள்.

யுகாதிகன் மிக முக்கியமான ஒன்று யுகாதி பச்சடி. இதில் இனிப்பு, புளிப்பு, கசப்பு என்று அறு சுவைகளையும் கொண்டதாக இருக்கின்றது.

அதாவது மனிதன் சந்திக்கின்ற இன்பம், துன்பம் ஏற்ற தாழ்வு என அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை என தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த உகாதி பச்சடி உள்ளது. மேலும் யுகாதி அன்று விஷ்ணு சகாஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நமக்கு நோய்கள் வராமல் நல்ல வாழ்வு கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US