2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

Report

விரதங்களில் வரலட்சுமி விரதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்கின்ற பொழுது ஒரு நாள் அல்ல நம்முடைய வாழ்க்கையே மாற்றக்கூடிய ஒரு சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லட்சுமி தேவி நமக்கு வரம் அளிப்பவள் என்பதாலே நாம் அவளை வரலட்சுமி என்று அழைக்கின்றோம். இந்த நாள் அஷ்ட லட்சுமிகளையும் வழிபாடு செய்து அவர்களுடைய முழு அருளையும் பெறுவதற்கு உகந்த நாளாக இருக்கிறது.

இந்த நாளில் நாம் முழு மனதோடு விரதம் இருந்து பக்தியுடன் அம்மனை மனதில் நினைத்த வழிபாடு செய்ய நிச்சயம் நாம் கேட்ட வரம் கிடைக்கும். வரலட்சுமி விரதம் என்பது 16 வகையான செல்வங்களையும் மகாலட்சுமியின் பரிபூரண அருளையும் வேண்டி சுமங்கலி பெண்களால் கடைபிடிக்கக் கூடிய ஒரு சிறப்பான விரதம் ஆகும்.

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா? | When Is 2026 Varalakshmi Vratham Date And Details

ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்

ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்

இந்த விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அல்லது முந்தைய வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்படியாக, இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 28ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி விரதம் :

இந்த வரலட்சுமி விரதம் தோன்றியதற்கு பின்னால் ஒரு புராண கதை இருக்கிறது. மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற ஒரு பக்தரின் கனவில் மகாலட்சுமி தோன்றி ஆடி அல்லது ஆவணி மாதம் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இது வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறியதாகவும், அதன்படி சாருமதி விரதம் அனுஷ்டித்து வழிபட்டதால் அவளுக்கு அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், மகாலட்சுமியின் வாக்கின்படி அந்த விரதம் இருந்து வழிபாடு செய்ததால் அவளுடைய குடும்பத்தில் செல்வம், அமைதி வளம் ஆகியவை இரட்டிப்பானதாக சொல்லப்படுகிறது. ஆகையால் பெண்கள் கட்டாயம் இந்த விரதம் இருப்பது குடும்பத்தில் நல்ல அமைதியை பெற்றுக் கொடுக்கும்.

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா? | When Is 2026 Varalakshmi Vratham Date And Details

குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன?

குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன?

இந்த விரதத்தின் போது பெண்கள் அதிகாலையில் எழுந்து வீடுகளை சுத்தம் செய்து லட்சுமி தேவியின் திருவுருவப்படத்திற்கு அல்லது கலசத்திற்கு புதிய புடவை நகை பூக்கள் மற்றும் பழங்கள் சமர்ப்பித்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

விரதம் இருக்கக் கூடிய பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் ஒருவேளை சாப்பிட்டு இறைவனை முழு நேரமும் மனதில் நினைத்து வழிபாடு செய்வது அவசியமாகும்.

மேலும், இந்த நாளில் தொடர்ந்து மகாலட்சுமியின் மந்திரங்கள் பாடல்கள் கேட்பது போன்றவற்றை செய்வது சிறப்பு. அதேபோல், இந்த நாளில் பெண்களுக்கு வஸ்திரம் போன்ற மங்களகரமான பொருட்களை நாம் தானம் செய்யும் போது நமக்கு வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US