பகல் இரவாக மாறப்போகும் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எப்பொழுது தெரியுமா?
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி மாதத்தில் வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடக்க இருக்கிறது. இருப்பினும் அடுத்த வருடம் அதாவது 2027 ஆம் ஆண்டு நடக்கும் சூரிய கிரகணம் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் அவை 21-ம் நூற்றாண்டில் நடக்க இருக்கும் மிகவும் நீண்ட மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகும்.
அந்த நேரத்தில் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும். இந்த முழு நீண்ட கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 20 முதல் 23 வினாடிகள் வரை பூமி முழு இருளில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக, முழு சூரிய கிரகணங்கள் 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஆதலால் இந்த கிரகணம் மிகவும் அரிதானதாக மட்டும் கருத்துவதோடு பகல் கூட இரவு போல் தோற்றம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடக்கவிருக்கும் இந்த அரிய நிகழ்வு தெற்கு ஐரோப்பா (ஸ்பெயின், போர்ச்சுகல்), வட ஆப்பிரிக்கா (எகிப்து, லிபியா), சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் தெரியும். ஆனால், இந்தியாவில் நம்மால் பார்க்கமுடியாது.
ஆதலால் நாம் அந்த காலகட்டங்களில் எந்த ஒரு கிரகண விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் ஒருபொழுதும் கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. சோலார் ஃபில்டர்கள் அல்லது சிறப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தி பார்ப்பதே கண்களுக்கு நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |