மாசி மகம் எப்பொழுது? மறந்தும் இதை செய்து விடாதீர்கள்
மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக மாசி மகம் இருக்கிறது. இந்த மாதத்தில் நாம் எந்த காரியம் செய்தாலும் அவை இரட்டிப்பு பலன் அளிக்கும் என்பது நம்பிக்கை.
மேலும்,எல்லா மதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எவர் ஒருவர் அன்றைய நாளில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மிக சிறந்த புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த வருடம் மாசிமகம் மாசி 28ஆம் தேதி (12.03.2025) புதன் கிழமையன்று வருகிறது.
இன்றைய தினத்தில் நம்மால் முடிந்த அன்னதானம் மற்றும் பிறருக்கு பொருள் தானம் அளித்தால் நம் வாழ்க்கை மேம்படும். மேலும்,ஒருவரின் பித்ரு கடமைகளை செய்ய மாசி மகம் சிறந்தநாளாகும்.
அதனால் மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் பெறலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதாவது,மாசிமகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாகும். நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும்.
ஆக அன்றைய தினத்தில் புனித நீர் நிலையில் நீராடுபவர்களுக்கு சிவனும், விஷ்ணுவும் அருள் புரிவார்கள். அவ்வாறு புனித நீராட முடியாதவர்கள் கட்டாயம் இறைவனின் புராணங்களும் வரலாறும் படிக்கலாம்.
மேலும் நீராடும் பொழுது ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை. நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல்,சிறப்புடையது.
அதே சமயம் பெண்கள் மாசி மகத்தில் வாழிபாடு செய்வது மிக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. அதாவது தங்களின் கணவர் உடல்நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் அன்றைய நாளில் சிவன் பார்வதி தேவியை வழிபட அவர்களின் அருளால் நல்ல இல்வாழ்க்கை அமையும்.
முடிந்தவர்கள் மாசி மகம் அன்று குலதெய்வம் வழிபாடு செய்யலாம். அவ்வாறு செய்வது எல்லா விஷயங்களுக்கும் நல்லதோர் தொடக்கமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |