2026-ல் முதல் ஏகாதசி எப்பொழுது தெரியுமா ? முழு விவரங்கள் இதோ
2026 வெகு சிறப்பாக பிறந்திருக்கிறது. மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் எல்லாம் விலகும் என்று மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அப்படியாக விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. அப்படியாக 2026-ல் முதல் ஏகாதசி விரதம் எப்பொழுது என்று பார்ப்போம்.
வேத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஷட்திலா ஏகாதசி என்கின்ற வருடத்தின் முதல் ஏகாதசி ஜனவரி 13 அன்று மதியம் 3.17 அன்று துவங்கி ஜனவரி 14 மாலை 5:52 மணி வரை இருக்கிறது. அதாவது ஜனவரி 14 புதன்கிழமை அன்று இந்த ஏகதேசியானது அனுஷ்டிக்கப்படுகிறது.
மேலும் 'ஷட்' என்றால் ஆறு, 'திலா' என்றால் எள் எனப்படும். இது ஏழு வகையான எள் தானங்களை முன்னிலைப்படுத்துவதாகும்.இந்த நாளில் எள் வைத்து ஆறு வகையாக வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.

அது மட்டுமல்லாமல் விஷ்ணு பகவானுக்கு எள் மிகவும் உகந்த பொருளாக இருப்பதால் அன்றைய தினம் எள் படைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வறுமை மற்றும் பாவங்கள் எல்லாம் விலகும் என்று சொல்கிறார்கள்.
அதோடு, இந்த நாளில் ஒருவர் விரதம் இருந்து வழிபாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகள் செய்தால் நிச்சயம் அவர்களுடைய பாவங்கள் விலகும், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் எல்லாம் நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அன்றைய நாளில் செய்ய வேண்டியவை:
ஷட்திலா ஏகாதசி தினத்தன்று அதிகாலை எழுந்து குடித்துவிட்டு பூஜைக்கான வேலைகளை தொடங்கவேண்டும். அதாவது விஷ்ணு பகவானுடைய சிலை அல்லது படம் இருந்தால் அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து துளசி மற்றும் மலர்கள் சாற்றி நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.
அன்றைய தினம் விஷ்ணு பகவானுக்கு கருப்பு உளுந்து மற்றும் எள் சேர்த்த கிச்சடி படைத்து நெய்வேத்தியம் செய்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு குடும்பத்தில் இருக்கக்கூடிய வறுமை யாவும் விலக விஷ்ணு பகவானுடைய மந்திரங்களை குடும்பங்களுடன் பாராயணம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். ஆக வருடத்தில் முதல் ஏகாதசியை தவறவிடாமல் குடும்பங்களுடன் வழிபாடு செய்தோம் என்றால் நிச்சயம் இந்த ஆண்டு சிறப்பாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |