கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

By Sakthi Raj Feb 07, 2026 11:30 AM GMT
Report

இந்து மதத்தில் கருப்பு என்பது சில நேரங்களில் அதிர்ஷ்டமாகவும் சில நேரங்களில் அவை நமக்கு எதிர்மறை விளைவுகளை கொடுப்பதாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் சிலர் கருப்பு நிறத்தை ஒரு தீய விளைவுகளை கொடுக்கக் கூடியது என்ற ஒரு எண்ணத்தையே வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கருப்பு நிறத்தை நாம் எப்போது அணியலாம்? எப்பொழுது அணிவதை தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

கருப்பு நிறம் என்பது நன்மை மற்றும் தீமை இரண்டையும் அவை வைத்திருக்கிறது. கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்த நிறமாக இருக்கிறது. ஆதலால் கருப்பு நிறத்தை அணியும் பொழுது நமக்கு சனி பகவானுடைய தாக்கமானது குறையும்.

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம் | When To Avoid Wearing Black Clothes 

2026: ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

அதேபோல் சனி திசை மற்றும் ஏழரை சனி காலங்களில் நிச்சயம் கருப்பு நிறத்தை அணியலாம். அவை நம்முடைய கர்ம வினையை குறைக்கும். மேலும் கருப்பு நிறம் என்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக நம்மை கவரும் வண்ணம் இருக்கும்.

ஆதலால் அனைவரும் அதை விரும்பி அணிய ஆசைப்படுவார்கள். அந்த வகையில் ஜோதிட ரீதியாக மகரம் மற்றும் கும்ப ராசியினர் கருப்பு நிற ஆடை அணிவது அவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும். அல்லது சனி திசை நடப்பவர்களும் இந்த கருப்பு நிற ஆடைகளை அணியலாம்.

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம் | When To Avoid Wearing Black Clothes

ஆன்மீகம்: தவறியும் இந்த நாட்களில் இதை செய்யாதீர்கள்.. இழப்பு நிச்சயம்

ஆன்மீகம்: தவறியும் இந்த நாட்களில் இதை செய்யாதீர்கள்.. இழப்பு நிச்சயம்

அவ்வாறு அவர்கள் அணியும் பொழுது தீய விளைவுகள் குறைகிறது. இருப்பினும் இந்த கருப்பு நிறம் அசுரர்களுடன் தொடர்புடையது என்பதால் அதை அணியும் பொழுது நமக்கு ஒரு சில பொருளாதார இழப்புகள் மற்றும் அபசகுனமான நிகழ்வுகள் நடக்கும் என்றும் சொல்வதுண்டு.

கருப்பு நிற ஆடையை விரும்பி அணிய விரும்புபவர்கள் நிச்சயம் அவர்களுடைய ஜாதகத்தை பார்த்து அதற்கு ஏற்றார் போல் அணியும் பொழுது நல்ல பலன்கள் கிடைக்கும். முடிந்தவரை இந்த கருப்பு நிற ஆடையை திருமணம் அல்லது முக்கிய பூஜைகள் அதோடு திங்கள் செவ்வாய் போன்ற தினங்களில் அணிவதை தவிர்க்க வேண்டும். அமாவாசை தினங்களிலும் கருப்பு நிற ஆடையை தவிர்த்தால் நன்மையை உண்டாகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US