அனுமன் தனது மகனுடன் இருக்கும் கோவில்: எங்கு உள்ளது தெரியுமா?
துவாரகையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பேட் துவராகயிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தண்டியில் உள்ளது ஒரு அனுமன் கோயில்.
இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. அனுமன் தனது மகன் மகரத்துவாஜனுடன் இருக்கும் கோயில் இது.
உலகிலேயே இங்கு மட்டும்தான் அனுமன் தனது மகனுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அனுமன் இலங்கையை எரித்து விட்டு கடலில் நீராடும்போது அவர் உடலில் இருந்து வியர்வைத் துளி கடலில் இருந்த முதலையின் வாயில் விழுந்தது. இதனால் முதலை மகரத்துவாஜனை பெற்றெடுத்தது.
அனுமன் மகனான மகரத்துவாஜரின் மூர்த்தி இங்கு பெரியதாக உள்ளது. வலது கை அபய ஹஸ்தத்துடனும், இடது கை மார்பிலும், வால் தரையிலும் அமைந்துள்ளது.
அவருக்கு அருகில் அமைந்துள்ள அனுமனின் சிலை ஒவ்வொரு ஆண்டும் தரைக்கு அடியில் செல்வதாகவும், அனுமனின் மூர்த்தி முழுவதுமாக தரையில் இறங்கும்போது கலியுகம் முடிவடையும் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோவிலின் உள்ளே சென்றவுடன் பழைய கால அரண்மனை போன்ற தோற்றத்துடன் கோயில் உள்ளது.
கிருஷ்ணர் வளர்ந்து, வாழ்ந்த இவ்விடத்தில் கிருஷ்ணரின் லீலைகள் முழுவதும் இந்த ஆலயத்தின் சுவர்களில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |