இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள மகேலாங் ரீஜென்சி அருகே போரோபுதூர் பகுதியில் மிகப்பெரிய புத்தர் கோயில் உள்ளது.
போரோபுதூர் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் மகாயான புத்தப் பிரிவை சார்ந்த கோயிலாகும்.
புத்த சமயத்தில் மகாயானம், ஹீனயானம் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.
இதில் மகாயானப் பிரிவை சேர்ந்தவர்கள் புத்தரை கடவுளாக வழிபடுகின்றனர்.
ஹீனயானம் பிரிவை சேர்ந்தவர்கள் அவரது போதனைகளை மட்டும் பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், இந்த மகாயான புத்தர் கோயிலானது சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில் கி.பி.8 முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது மொத்தம் 9 தளங்களை கொண்டுள்ளது.
அதில் முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும் மீதமுள்ள மூன்று அடுக்குகள் வட்ட வடிவத்திலும் மேல் பகுதி மையக் குவிமாடமும் காணப்படுகிறது.
இதன் மொத்த தொலைவு 4 கிலோமீட்டராகும். இதில் மொத்தம் 504 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன.
மேலும், யுனெஸ்கோ இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னத்தில் இணைத்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |