வீட்டில் எந்த இடத்தில் துடைப்பம் வைக்க வேண்டும்?
நம் வீட்டில் வாங்கும் எல்லா பொருட்களும் முக்கியமானவை.அவை நாம் பணம் கொடுத்து வாங்குவதால் மட்டும் அல்ல,அதில் நமக்கே தெரியாத பல ஆன்மீக விஷயங்கள் நிறைந்து இருக்கும்.உதாரணமாக நாம் வீட்டை சுத்தம் துடைப்பம் இதில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்றால் நம்பமுடிகிறதா? அதை பற்றி பார்ப்போம்.
வீட்டிற்கு தேவையான முக்கியமான பொருட்களில் இந்த துடைப்பம் முதல் இடம் வகிக்கும்.அதாவது சுத்தம் சோறு போடும் என்பார்கள்.
நம்முடைய வீட்டை சுத்தமாக வைக்க உதவுவது இந்த துடைப்பம் தான்.தென்னந்துடைப்பம், பூந்துடைப்பம் என்று இருந்தது போக இப்பொழுது பிளாஸ்டிக் துடைப்பம் வந்துவிட்டது. நம் இல்லங்களில் பிளாஸ்டிக் துடைப்பத்தை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கொஞ்சம் முன்னோக்கி சென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் துடைப்பம் வைப்பதற்கு என்று வீட்டில் ஒரு தனி இடம் நிரந்தரமாக இருக்கும். அந்த இடத்தை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் அவர்கள் அதை வைக்க மாட்டார்கள். மேலும் அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த இடம் தெரியும்.
புதிதாக வருபவர்களால் துடைப்பம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாது. வீடு பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தை வீட்டிற்குள்ளும், வாசலைப் பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தை வீட்டிற்கு வெளியேயும் என்று எல்லோர் வீட்டுலையும் இரண்டு துடைப்பம் இருக்கும்.
இரண்டையும் ஒன்றாக வைக்க கூடாது. மேலும் சிலர் படிக்கட்டுகளுக்கு அடியில் துடைப்பத்தை வைப்பார்கள். அவ்வாறு வைக்கவும் கூடாது. துடைப்பத்தை படுக்கப் போட்டது போல் வைக்கக்கூடாது. நாம் பிடிக்கும் இடம் மேலாகவும் பெருக்கும் இடம் கீழாகவும் இருப்பது போல் வட மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
அதேபோல் சிலர் துடைப்பத்தை காலால் எட்டி உதைப்பதும் அதை மிதிப்பதும் என்று இருப்பார்கள். அவ்வாறு செய்யவே கூடாது. இப்படி எல்லாம் செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் என்பது ஏற்பட்டு அதனால் மன கஷ்டமும் உண்டாகும்.
துடைப்பம் தேயும் வரையோ அல்லது உடையும் வரையோ உபயோகப்படுத்தக் கூடாது.
நாம் புதிதாக துடப்பம் வாங்க வேண்டும் என்றால் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளிலும் வீட்டில் இருப்பவர்களுடைய பிறந்தநாள், திருமண நாள் போன்ற நல்ல நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்ய மஹாலக்ஷ்மி அருள் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |