2025 மே மாதம் எந்த 3 ராசிகளுக்கு அமோகமாக அமைய உள்ளது
மே மாதம் 5 முக்கிய கிரகங்கள் அதனுடைய ராசிகளை மாற்ற உள்ளது.கிரகங்களின் அதிபதியான புதன் மே 7 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். அதனை தொடர்ந்து மே 15ஆம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார்.
பிறகு மே 31 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். குரு பகவான் மே 14ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நடக்க உள்ளது. மே மாதத்தில் நடக்க இருக்கும் இந்த கிரக பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமைய போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த மே மாதம் தொடர் நற்செய்திகளை கொண்டு வந்து சேர்க்கபோகிறது. இவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய ஏற்றங்கள் கிடைக்க போகிறது. குடும்ப நபர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் பொழுது போக்கு நேரத்தை செலவு செய்து மகிழ்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு மே மாதம் முழுவதும் செய்யும் காரியங்களில் வெற்றியை தேடி கொடுக்க போகிறது. இந்த மாதத்தில் மனதில் நேர்மறை சிந்தனைகள் பெருகும். சிலருக்கு புதிய வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் பணியாளர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைத்து முன்னேற்றம் அடைவீர்கள்.
துலாம்:
துலாம் ராசி மே மாதம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை கொடுக்க போகிறது. தொழில் மற்றும் வணிகத்தில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பூர்விக சொத்துக்களில் உண்டான பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |