ஜோதிடம் 2025: இந்த ஆண்டு முதல் தலையெழுத்தே மாறும் ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் நவ கிரகங்களின் சுழற்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டு மாறுதல்களை சந்திப்பார்கள். இந்த கிரக மாற்றத்தால் எல்லா ராசிகளுக்கும் தாக்கம் என்பது நன்மை, தீமை இவை இரண்டை பொறுத்தே அமைகிறது. அப்படியாக, இந்த 2025 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தங்கள் தலையெழுத்தே மாற்றி அமையும் வாய்ப்புகள் உண்டாகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்கு மனதளவில் நல்ல மாற்றம் உண்டாக காத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவர்கள் மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டார்கள். இந்த 2025 ஆம் ஆண்டு அவர்கள் மீண்டும் இழந்த தைரியத்தை பெற்று வலிமையோடு வேலைகளை செய்வார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்கு புதன் அதிபதியாக இருப்பதால், இத்தனை வருட வாழ்க்கையில் தவற விட்ட அனைத்தையும் பெற போகிறார்கள். வேலை தொடர்பான விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமைய போகிறது. உங்கள் கனவுகள் நினைவாகும் யோகம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் முன்னேற்ற பாதையை வழி அமைத்து கொடுப்பார். தொழில் ரீதியாக சில சிக்கலை சவால்களை சந்தித்த நபர்கள் இந்த வருடம் நிலையான தொழிலில் அமர்ந்து வெற்றி காண்பார்கள். இந்த வருடம் இவர்கள் துணிச்சலால் போராடி சில விஷயங்களை அடைவதால் சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும்.
மீனம்:
மீன ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால் இந்த ஆண்டு ஆன்மீக பயணத்தை மேற்கொள்வார்கள். மனதில் இருந்த சங்கடம் கவலை எல்லாம் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகள் உங்களை தேடி வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |