அக்னி நட்சத்திரம் 2025: எந்த விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்
ஜோதிடத்தில் நவகிரகங்களின் மிக முக்கிய கிரகமான சூரியன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். அப்பொழுது நம்முடைய பூமியில் அதிக வெயில் தாக்கம் காணப்படும்.
அவை அக்னி நட்சத்திரத்தில் உருவாகுவதாலும் வெயில் அதிகம் காணப்படுவதாலும், அதை கத்திரி வெயில் என்பார்கள். அப்படியாக, இந்த அக்னி நட்சத்திரம் சித்திரை 21இல் தொடங்கி வைகாசி 15 வரை தொடரும்.
அதேபோல் இந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கடுமையான வெயில் காலங்களில் நாம் வெளியே செல்லும் பொழுது கைகளில் கட்டாயம் தண்ணீர் வைத்து கொள்வது அவசியம். காரணம், உஷ்ணம் அதிகம் காணப்படுவதால் மயக்கம் போன்ற நிலைமை உண்டாகும்.
அதே போல் இந்த கடுமையான அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் சில விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதாவது அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடிக் காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் , மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்புப் பணிகள் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் , பூமி பூஜை போன்றவற்றைச் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சுப காரியங்களான திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்வது நமக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.
இந்த காலகட்டத்தில் நீர் தானம், அன்னதானம், காலணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றைச் செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |