7 நாட்களில் உருவாகும் ராஜயோகம்-வெற்றி நடை போடும் 5 ராசிகள் யார்?

By Sakthi Raj Jan 17, 2025 08:30 AM GMT
Report

ஜோதிடத்தில் 9 கிரகங்களும் தங்களுடைய காலம் முடிந்த பிறகு தங்களுடைய ராசியை மாற்றுகிறார்கள்.அதே போல் புதனும் அவருடைய தனுசு ராசி பயணத்தை மாற்ற போகிறார்.தற்போது தனுசு ராசியில் இருக்கும் புதன் ஜனவரி 24 மாலை மகர ராசியில் நுழைய உள்ளார்.

புதனின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மன கவலைகள்,பொருளாதாரம்,போன்றவற்றில் சாதகமாக அமைய உள்ளது.அப்படியாக புதனின் இந்த மாற்றத்தால் வெற்றியை தன் வசம் ஆக்கப்போகும் 5 ராசிகள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியினருக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் படிப்படியாக குறையும்.புதிய வேலை வாய்ப்புகள்,உயர் பதவிகள் தொழில் நுட்ப துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.உடன் பிறந்தவர்களின் உதவி முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும்.பிள்ளைகள் கல்விக்காக பணம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் விரைவில் சரி ஆகிவிடும்.குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள்.தாய் வழி உறவுகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.வெளிநாடு செல்லவேண்டும் நினைப்பவர்களுக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் இது.வியாபரம் அதிக அளவில் லாபத்தை பெற்று தரவில்லை என்றாலும் முன்பை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரியல் எஸ்டேட்டில் இலாபம் தரும், தீரா நோய் தீர்ககும் வைத்தீஸ்வரன் கோயில்

ரியல் எஸ்டேட்டில் இலாபம் தரும், தீரா நோய் தீர்ககும் வைத்தீஸ்வரன் கோயில்

கன்னி:

கன்னி ராசிக்கு புதனின் இந்த மகர ராசி சஞ்சாரம் ஒரு சிறந்த பலனை கொடுக்க போகிறது.அலுவலகத்தில் உங்களுக்கான ஆதிக்கம் அதிகரிக்கும்.உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.சகோதரன் வழியில் நல்ல உதவி கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் திட்டமிட்டு வேலை செய்வதால் நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும்.உங்களுடைய புத்திசாலித்தனம் வேலையும் உங்களுக்கு ஏற்ற பாராட்டுக்கள் பெற்று தரும்.தொழில் செய்வபவர்கள் தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.இருந்தாலும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

மகர ராசியில் புதன் நுழைவதால் இது இவர்களுக்கு மிக பெரிய பலனை கொடுக்க போகிறது.மேலும் கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் இருக்கிறார்.இந்த காலகட்டத்தில் ம்=பக்தியுடன் உழைத்தால் நீங்கள் நினைத்த இலக்கை அடையலாம்.மனதில் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.கடனால் சோர்வடைந்தவர்களுக்கு பணம் தேடி வரும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US