ஜோதிடம்: இந்த பறவை வீட்டிற்கு வந்தால் துரதிஷ்டமாம்
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியாக, நம்முடைய வீடுகளை சில பறவைகள் தேடி வருவதுண்டு. அவ்வாறு வரும் பறவைகளில் சில பறவைகள் நேர்மறை சக்திகளும், சில பறவைகள் எதிர்மறை சக்திகளும் கொடுக்கிறது.
அந்த வகையில் நம் வீட்டிற்கு வரும் பறவைகளில் எந்த பறவைகள் அதிர்ஷ்டமாகவும் துரதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம்.
நம்முடைய இந்து மதத்தில் வழிபடக்கூடிய கடவுள்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலங்குகள், பறவைகள் வாகனமாக இருக்கக்கூடியதை பார்க்க முடிகிறது. இதற்கு பின்னால் நாம் இயற்கையையும் பாதுகாக்கவேண்டிய கடமைகள் இருக்கிறது என்று உணர்த்துகிறது.
வாஸ்து படி ஒருவர் வீட்டிற்கு கிளி வருவதும், சத்தமிடுவதும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு கிளி வருவது நமக்கு இறைவன் துணை இருப்பதை உணர்த்துகிறது. அதே போல், மயில் வருவது நமக்கு நிதி நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.
வீடுகளில் எறும்புகள் வருவது இயல்பு என்றாலும், கருப்பு எறும்புகள் வீட்டிற்கு வருவது நமக்கு பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது. நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை தருவதாக குறிப்பிடுகிறது.
ஆனால், வீட்டிற்கு புறா வருவது நமக்கும் எதிர்மறை விளைவுகளை கொடுக்கிறது. புறா வீட்டிற்கு வந்து சத்தமிடுவது நமக்கு நல்ல சகுனமாக பார்க்கப்படவில்லை. அதனால் போதுமானவரை வீடுகளில் புறா வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
அதே போல் இரவுகளில் வௌவால் நடமாட்டம் அதிகம் காணப்படும். ஆனால் ஒருவர் வீட்டிற்கு வௌவால் வருவது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. அதாவது வௌவால் வீட்டிற்கு வந்தால் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம் என்று தோன்றுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |