இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு
ஜோதிட ரீதியாக நாம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவீனம் மற்றும் பலம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நாம் நம்மை வாழ்க்கையில் நகர்த்தி கூட்டி செல்வதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
அந்த வகையில், ஆண்டியாக இருந்தாலும் அரசனாகவே இருந்தாலும் ஒரு சிலருக்கு அவர்களுடைய ஜாதக அமைப்பின்படி அவர்கள் இருக்கின்ற இடத்தை விட்டு வெளியே நகருகின்ற பொழுது அவர்களுக்கு 100% வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கிறது, வெற்றி கிடைக்கிறது.

அதாவது, அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பொருளாதாரமாக இருக்கட்டும் திருமணம் குழந்தை பாக்கியம், வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் இவை எல்லாமே இடமாற்றத்தால் இவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
அதாவது ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தாலும் எந்த லக்னமாக இருந்தாலும் சிம்மத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் லக்னத்திற்கு லக்னாதிபதி மறைவு இடங்களில் இருந்தாலும் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் கட்டாயமாக இவர்கள் இடமாற்றம் செய்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |