கடவுள் வழிபாட்டை விடவும் இது தான் முக்கியமாம்? என்ன தெரியுமா?
இறைவழிபாடு என்பது நமக்கு பல துன்பங்களை கடக்கும் சக்தியை கொடுக்கிறது. மேலும் ஒவ்வொருவரும் அவரவர் மனதிற்கு பிடித்த கடவுள்கள் மீது அவர்கள் அன்பு செலுத்தி வழிபாடுகளை மேற்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
அப்படியாக கடவுள் வழிபாட்டினால் நம்முடைய வாழ்க்கை மேன்மை அடைந்து மனதில் தெளிவு பிறக்கிறது. அப்படியாக நாம் செய்யக்கூடிய இறை வழிபாடு எப்படி இருக்க வேண்டும்? இறை வழிபாட்டில் எது மிகவும் அவசியம் என்பதை பற்றி பார்ப்போம்.
பூமியில் பிறந்த எல்லோரும் அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப துன்பங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த துன்ப வேளையில் தான் நம்முடைய மனமானது இந்த பிரபஞ்ச சக்தியை நோக்கி ஓடுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தில் நம்மை மீறி ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த சக்தி என்ன? என்பதை தேடி நம்முடைய மனம் தெளிவாக வேண்டும் என்ற ஒரு தேடுதலில் இறங்குகிறது. மேலும் துன்பகாலங்களில் தான் நம்முடைய மனமானது இறைவனை இன்னும் அதிகமாக பற்றிக் கொள்கிறது.
அப்படியாக கடவுள் வழிபாட்டை விடவும் மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இது இல்லை என்றால் எவ்வளவு முக்கிய பரிகாரங்கள் பூஜைகள் செய்தாலும் பலிக்காது. அதுதான் "நம்பிக்கை". அதாவது இறைவழிபாடு பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்யும் பொழுது நம்முடைய கர்மவினை ஆனது குறைகிறது என்பது உண்மை தான்.
அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகள் ஒரு பகுதியில் கரைந்து கொண்டே இருந்தாலும் நம்முடைய மனமானது தெளிவடைந்தாலும் எதற்காக நம் மனதில் இன்னும் பயம் மற்றும் துன்ப வேளையில் பதட்டம் கொள்கிறது என்று கேட்டால் இறைவழிபாட்டில் சரியான புரிதல் இல்லாமையே ஆகும்.
கடவுளுக்கு தினமும் விளக்கேற்றி, நெய்வேத்தியங்கள் படைத்து பூஜைகள் செய்வதை காட்டிலும் இறைவன் என்னுடன் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை என்கின்ற ஒரு நம்பிக்கை உருவாக வேண்டும். உண்மையான பக்தி என்பது எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதும் கவலை கொள்ளாது.
உண்மையான பக்தி என்பது இன்றைய தினத்தில் அவர்களுடைய கடமையைச் செய்து மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு நிலையை கொடுக்கும். ஆக பக்தி என்பது நம்மை எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயத்தினால் பற்றி கொள்ளக்கூடிய ஒரு வழிபாடாக இருக்கக் கூடாது. இறை வழிபாடு என்பது இறைவன் என்னுடன் இருக்கிறார்.
அவர் நடப்பதை பார்த்துக் கொள்வார் எனக்கு நடக்கக்கூடிய கர்ம வினைகள் அனைத்தும் அவனுடைய செயல், நான் அனுபவித்து கடந்த ஆக வேண்டியதை கடப்பேன். மீதம் உள்ளதை அவன் பார்த்துக்கொள்வான் என்ற ஒரு நம்பிக்கையை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கைதான் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

அதாவது இந்த உலகத்தில் பாதி பிரச்சனைகள் பயத்தினால் உருவாகக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதாவது இந்த பயம் ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டால் அவன் தன்னுடைய சுயநிலையை முதலில் இழந்து விடுகிறான். அந்த சுயநிலையை இழக்கும் பொழுது அவனால் நிகழ்காலத்தில் வாழக்கூடிய தன்மை விலகுகிறது.
அதோடு கடவுளிடம் அவன் ஒரு முழுமையான உணர்வுகள் இல்லாத ஒரு பிரார்த்தனைகளை வைக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகிறது. ஆதலால் நாம் செய்யக்கூடிய பூஜைகள் இறை வழிபாடுகள் புனித யாத்திரைகள் இவை அனைத்தும் கடந்து நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் நம்பிக்கை கொண்டு நாம் செய்தால் மட்டுமே அதற்கு பலன் கிடைக்கும்.
இதைத்தான் கிருஷ்ண பகவான் சொல்கிறார் "நான் உன்னுடன் இருக்கிறேன் என்று நீ நம்பிக்கை கொண்டால் உனக்கு எந்த வேளையிலும் துன்பம் என்பது வருவதில்லை" என்று. ஆக நாம் இறைவனை நம்புகிறோம் என்றால் அவன் பார்த்துக் கொள்வான் என்று அவன் கைகளில் விடும் பொழுது நாம் எதற்கும் கவலை கொள்ளாத ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டும் தான் வாழ்வோம்.
நாம் பயம் கொள்கிறோம் என்றால் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை தான் நாம் காட்டுகிறோம். ஆக நம்பிக்கை என்ற ஒரு மந்திரம் தான் இந்த உலகத்தையும் நம்மையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் இறைவனை முழுமையாக நம்பி செயல்படுவோம். அப்பொழுது இறுதி நொடியிலும் பல அதிசயங்களை நாம் காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |