இந்த உலகத்தில் மரண தண்டனை விடவும் மோசமான தண்டனை எது தெரியுமா?
நாம் மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் செய்கின்ற செயலுக்கு நாளை எதிர்வினைகள் எதுவும் வராது என்று. ஆனால், பிரபஞ்சம் அவ்வாறு இயங்கவில்லை என்பதற்கு சான்றாக புராணங்களில் ஒரு சம்பவம் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
அயோத்தியில் ராம ராஜ்யம் நடந்து கொண்டிருக்கும் பொழுது தினமும் ராமர் அவருடைய காவலரை அழைத்து, இன்று யாராவது அவர்களுடைய குறைகளை சொல்வதற்கு வந்திருக்கிறார்களா என்று கேட்பது வழக்கம்.
அப்பொழுது, அந்த காவலாளர் மனதில் "பகவானே அமர்ந்து ராஜ்ஜியம் செய்யும் பொழுது யாருக்கு என்ன குறை வந்துவிடும்" என்று நினைத்துக் கொண்டு இன்றும் யாரும் வரவில்லை என்று பதில் அளிப்பார்.

அதை ராமர் கேட்டுவிட்டு 'நன்று' என புன்னகையுடன் சென்று விடுவது வழக்கம். அப்படியாக, ஒரு நாள் ஒரு நாய் அதிக ரத்த காயங்களுடன் ராம ராஜ்யத்திற்கு வந்து எல்லா உயிர்களும் ஒன்றுதானே அப்படி என்றால் எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவ நிலைக்கு நீதி வேண்டும்.
உடனடியாக, ராமரை வரச் சொல்லுங்கள் என்று காவலரிடம் முறையிட்டது. உடனடியாக காவலரும் ராமரிடம் சென்று விஷயத்தை கூற பொறுமையாக ராமர் செய்தியை கேட்டுவிட்டு அந்த நாயை உள்ளே அழைத்து வரச் சொன்னார். உள்ளே வந்த அந்த நாய் ராமரை பார்த்து ராமா உங்களுடைய ராஜ்ஜியத்தில் எல்லா உயிரினங்களும் சமம் தானே!
எல்லோருக்கும் அவர்களுடைய தர்மம் கிடைக்க வேண்டும் அல்லவா? ஆனால் நான் இன்று இவ்வாறு இரத்த காயங்களுடன் இருப்பதற்கு ஒரு சந்நியாசி காரணமாக இருக்கிறார். அதை நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் ராமா என்று நடந்ததை அந்த நாய் விவரிக்க தொடங்கியது.
நான் என்னுடைய உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது காரணமே இல்லாமல் சந்நியாசி நாயை கல்லால் அடித்ததாகவும் தன் உடலை சேதப்படுத்தி விட்டதாகவும் அந்த நாய் வருத்தம் அடைந்தது. அதோடு மட்டுமல்லாமல் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த சந்நியாசிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் ராமரிடம் அந்த நாய் கேட்டுக் கொண்டது.

பிறகு சபைக்கு உடனடியாக அந்த சந்நியாசி வர வழைக்கப்பட்டு அந்த நாயை ஏன் கல்லால் அடித்து சித்திரவதை செய்தாய் என்று ராமர் கேட்கிறார். அதற்கு அந்த சந்நியாசி ராமா நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே உணவு உண்கின்ற ஒரு பழக்கம் உள்ளவன். அன்று எனக்கு எந்த ஒரு உணவும் கிடைக்கவில்லை.
ஆனால், நாய் தனக்கு கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்ற, இதை பார்த்து எனக்கு கிடைக்காதது இந்த நாய்க்கு கிடைத்துவிட்டது என்று கோபத்தில் நான் இந்த காரியத்தை செய்து விட்டேன் என்றார். சன்னியாசி சொன்னதை கேட்டவுடன் ராமருக்கு அதிக அளவில் கோபம் வரவும், வாயில்லா ஜீவனை உங்களால் எவ்வாறு இப்படி வதைப்பதற்கு மனம் வந்தது.
சந்நியாசம் என்பது பற்றற்ற நிலையை உணர்த்தக்கூடியது. அதை கூட உணராமல் இவ்வளவு பெரிய காயத்தை அந்த நாய்க்கு கொடுத்து விட்டாய். ஆகவே உனக்கு மரண தண்டனை வழங்குகிறேன் என்று தீர்ப்பு சொன்னால் ஸ்ரீ ராமர்.
ஆனால், அங்கு அந்த நாய் ராமா இந்த தண்டனை அவருக்கு போதாது. இதைவிட பெரிய தண்டனை அந்த சந்நியாசிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராமர் முகத்தில் ஒரே ஆச்சரியம். நாம் கொடுத்ததே மரண தண்டன. இதைவிட பெரிய தண்டனை வழங்க வேண்டும் என்று இந்த நாய் கேட்கிறதே என்று நாயைப் பார்த்து அது என்ன தண்டனை? என்று கேட்டார்.

அந்த நாய் சொல்கிறது ராமா நான் சென்ற பிறவியில் கோயில் தர்மகர்த்தாவாக வேலை செய்தேன். அப்பொழுது நான் ஆலயத்தில் இருக்கக்கூடிய சொத்துக்களை தவறான முறையில் கொள்ளையடித்து அதற்கான தண்டனையாக தான் இந்த பிறவியில் குப்பையில் கிடப்பதை எடுத்து சாப்பிட்டு, பல பேரிடம் கல்லடி பட்டு பாவத்திற்குரிய தண்டனையை அனுபவித்து வருகின்றேன்.
அதனால் இவருக்கும் கோயில் தர்மகத்தாவாக பதவியை கொடுங்கள். நிச்சயமாக அவர் அந்த வேலையில் தவறான வழியை பயன்படுத்துவர். பிறகு என்னைப் போலவே பிறவி எடுத்து கல்லடி வாங்கி அந்த கொடுமையை எதிர்கொள்ளட்டும் என்று சொன்னது நாய்.
ஸ்ரீ ராமரும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தண்டை கொடுத்தார். ஆக இங்கு மனிதர்கள் எந்த நிலையில் எடுத்தாலும் தர்மத்தை மீறாத ஒரு நிலையை அடைய வேண்டும். இல்லை என்றால் இன்று செய்யக்கூடிய தவறுக்கு நாளை மிகப்பெரிய பாடமாக வாழ்க்கை அமையக்கூடும் என்பதற்கு இந்த ஒரு கதை சாட்சி.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |