திருப்பதி ஏழுமலையான் தனது கடன் பிரச்சனை தீர வழிபட்ட திருத்தலம்
திருப்பதி ஏழுமலையான் தனது திருமணத்துக்காக வாங்கிய கடன் தொல்லையால் தவித்தபோது, அந்த பிரச்சனை தீர வழிபட்ட திருத்தலம் இது.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாசூர் திருத்தலமாகும். இக்கோயிலை சோழ மன்னன் கரிகால பெருவளத்தான் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், அம்பாள் தங்காதலி. திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.
ஒரு சமயம் திருப்பதி வேங்கடாஜலபதி தனது திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இதை சரி செய்வதற்காக சிவபெருமானை வழிபட்டார் பெருமாள்.
அவரது வேண்டுதலை ஏற்ற ஈசன், பெருமாளிடம், "திருமணத்தின்போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று வாழ்த்துவார்கள். அந்த 16 என்பது 16 செல்வங்களைக் குறிக்கும்.
இதனைத்தொடர்ந்து, அசுரர்கள் இருவர் பிரம்மாவின் வேதத்தை திருடிச்சென்று கடலுக்கு அடியில் வைத்ததால் படைக்கும் தொழில் நின்றுபோனது.
இதனால் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார். அப்போது அவருக்கு தோஷம் பிடித்ததால் அவரிடமிருந்த 11 செல்வங்கள் போய்விட்டன.
பெருமாள் தாம் இழந்த செல்வங்களை திரும்பப் பெற திருப்பாசூரில் உள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் மாலை, 11 வாழைப்பழ மாலை, 11 அருகம்புல் மாலை, 11 நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டதால் 3 மாதங்களில் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார்.
எனவே, பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும், வியாபாரம் பெருகும், செல்வ செழிப்பு கிட்டும் என்று நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |